தமிழக அரசை எழுப்ப அலார ஓசை: பாமக
திண்டிவனம்:
தமிழக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகவும், அதன் தூக்கத்தைக் கலைக்க கோட்டை அருகேஅலார மணியோசை எழுப்பும் போராட்டம் நடத்தப் போவதாகவும் பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில் பெரும் குழப்பம்நிலவுகிறது. இதனால் பெற்றோரும், மாணவ, மாணவிகளும் படும் அவதியை பார்க்க முடியவில்லை.
தமிழக கல்வித்துறையால் தான் இத்தனைக் குழப்பமும். கல்வித்துறையின் குழப்பத்தால்கோர்ட்டுக்குப் படியேறியுள்ளனர் மாணவ, மாணவிகள். நீதிமன்றத்தின் தீர்ப்பை விட அரசின்கொள்கை முடிவுகளே இந்தப் பிரச்சனைக்கு உகந்த தீர்வைத் தர முடியும்.
தமிழக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. இந்த அரசின் தூக்கத்தைக் கலைத்து, எழுப்பும்வகையில் கடிகார அலார மணி ஓசை எழுப்பும் போராட்டத்தை நடத்தப் போகிறோம்.
எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஆளுக்கு ஒரு கடிகாரத்தை எடுத்துக் கொண்டு கோட்டை அருகேரோட்டில் நின்று அலார ஒலியை எழுப்புவர். இந்த மணியோசைக்குப் பிறகும் தமிழக அரசுதூங்கினால், செயல்படாமல் இருந்தால் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
மேலும் தேர்தல் முடிந்ததும் சட்டசபை கூட்டப்பட்டிருக்க வேண்டும். பட்ஜெட் மீது விவாதம்நடந்திருக்க வேண்டும். ஜூலை மாதம் வரை தான் அரசு தனது வரவு-செலவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது.இதனால் இந்த மாதம் சட்டசபையை கூட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
ஆனால், சபை எப்போது கூடும் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. தேர்தல்தோல்வியைத் தொடர்ந்து சட்டசபையில் எதிர்க் கட்சிகளைச் சந்திக்கவோ, விவாதிக்கவோ அரசுதயங்குகிறது.
மாத கடைசியில் அவையைக் கூட்டி பட்ஜெட் மீது விவாதமே நடத்தாமல் ஒட்டு மொத்தமாகமானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இது ஜனநாயகப்படுகொலையாகும்.
பா.ஜ.கவால் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ராம்மோகன் ராவுக்கு மாநில மக்களின் நலனில்எந்த அக்கறையும் இல்லை. இதனால் அவராகவே பதவி விலகிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் அவரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications