காஞ்சிபுரம் அருகே கனடா நாட்டுப் பெண் புத்த துறவி மானபங்கம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ஓரகடம் என்ற இடத்தில் 47 வயதான கனடா நாட்டுப் பெண் புத்தத் துறவிமானபங்கப்படுத்தப்பட்டுள்ளார். அவரிடமிருந்த பாஸ்போர்ட், விசா ஆகியவை திருடப்பட்டுள்ளன.
கனடாவைச் சேர்ந்த புத்த மத துறவி எரினா ரீமர். இவர் கடந்த ஒரு வருடமாக திருவண்ணாமலையில்தங்கியுள்ளார். அங்கிருந்து கடந்த 4ம் தேதி காஞ்சிபுரம் வந்த அவர் நேபாளம் செல்வதற்காக சென்னைக்கு காரில்கிளம்பினார்.
கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறுவதற்காக அவர் சென்று கொண்டிருந்தார். காரை இவரே ஓட்டியுள்ளார்.
இரவு 7 மணியளவில் திண்டிவனம் அருகே அவரது கார் விபத்தில் சிக்கியது. இதனால் நடு ரோட்டில் பரிதவிக்கும்நிலைக்கு எரினா தள்ளப்பட்டார். அப்போது அங்கு கூடிய பொது மக்கள், தலை மொட்டையடித்தவெள்ளைக்காரப் பெண்மணி என்ன பேசுகிறார் என்று புரியாமல் குழம்பினர்.
திடீரென பொது மக்களில் சிலர் இவரை தீவிரவாதி என்று சொல்லி தாக்க ஆரம்பித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய ரீமர், ரோட்டில் ஓடியுள்ளார். அப்போது அங்கு ஒரு காரில் வந்த நான்கு பேர்,காரை நிறுத்தி எரினாவிடம் பேசினர்.
அப்போது தன்னை பொது மக்கள் தாக்குவதைச் சொன்ன எரீனா, தன்னை காப்பாற்றுமாறு கோரியுள்ளார்.இதையடுத்து நால்வரும் இவரை காரில் ஏற்றிக் கொண்டனர்.
தாங்களும் சென்னைக்குச் செல்வதாகவும், அங்கு இறக்கிவிடுவதாகவும் கூறியுள்ளனர்.
அதை நம்பிய எரீனா நான்கு பேருடனும் காரில் சென்று கொண்டிருந்தார்.
ஆனால், காரில் உட்கார்ந்திருந்தபோதே அந்த நான்கு பேரும் எரீனாவை சீண்டத் தொடங்கினர். இதையடுத்துஅவர்களுடன் போராடிய எரீனா, மிகவும் சிரமப்பட்டு காரிலிருந்து குதித்துள்ளார்.
காரை நிறுத்திய அந்தக் கும்பல் எரீனாவை வயலில் விரட்டிச் சென்று கற்பழிக்க முயன்றுள்ளது. அவரை கட்டிப்போட்டு நிர்வாணமாக்கி, பலாத்காரம் செய்துள்ளது. அவர்களிடமிருந்து போராடிய எரீனா, முடியாமல் போகவேமயக்கமானார்.
இதனால் பயந்து போன கும்பல் எரீனாவின் பாஸ்போர்ட், விசா, பணம் ஆகியவற்றைை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டது.
நான்குபேரால் கற்பழிக்கப்பட்ட எரீனா இரவு முழுவதும் வயலில் மயங்கிக் கிடந்தார். விடிகாலையில் இதைப்பார்த்த அப் பகுதி மக்கள் அவரை உடனே ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.
போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நான்கு பேரும் விரைவில்பிடிபடுவர் என போலீஸார் கூறுகின்றனர்.
அந்த நான்கு காமக் கொடூரர்களாலும் முகமெல்லாம் கடிபட்டு, காரில் இருந்து விழுந்ததால் உடலெங்கும்காயங்களுடன் எரீனா மருத்துவமனையில் அழுதபடியே இருக்கிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications