சாட்சியத்தை அழிக்க முயன்ற முகம்மது அலி!
சென்னை:
நாட்டையே உலுக்கிய ரூ. 30,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடியில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் பலகாவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிபிசிஐடி டிஐஜி முகம்மது, உதவி ஆணையர் சங்கர் ஆகியோருக்குஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இவர்களின் ஜாமீன் மனுக்கள் மீது நேற்று சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில்நடந்தது.
அப்போது போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கு தொடர்பாக சில பரபரப்பு தகவல்களை நீதிமன்றத்தில் சிபிஐவழக்கறிஞர் ஜேக்கப் டேனியேல் தெரிவித்தார்.
முகம்மது அலி, சங்கர் தவிர மேலும் பல காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த மோசடியில் தொடர்புஉள்ளதாகவும், எந்தெந்த காவல்துறை அதிகாரிக்கு எவ்வளவு பணம் கைமாறியது என்பதை அடக்கிய ஆடியோகேசட்டையும் சிபிஐ அதிகாரிகள் நீதிபதி அருள்தாஸிடம் சமர்ப்பித்தனர்.
போலி முத்திரைத் தாள் விற்பனையை அனுமதிப்பதற்காக தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் சிலருக்குலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது என்று தெரிவித்த டேணியல், வேலியே பயிரை மேய்ந்தகதையாக இந்த மோசடி நடந்துள்ளது.
மேலும் இந்த மோசடியின் முக்கிய புள்ளியான அப்துல் கரீம் தெல்கியை எல்ஐசி அதிகாரி சாது சென்னைநட்சத்திர ஹோட்டலில் வைத்து ஐந்து முறை சந்தித்ததாகவும், அப்போது தெல்கியின் போலி முத்திரைத் தாள்களைஎல்ஐசிக்கு விற்பது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.
சாது மூலமாக மட்டும் ரூ. 100 கோடிக்கும் அதிகமான போலி முத்திரைத் தாள்களை எல்ஐசிக்கு தெல்கிவிற்றுள்ளார்.
இது தவிர முகம்மது அலியை தெல்கியின் கூட்டாளியான நிஜாமுதீன் பலமுறை அவரது அலுவலகத்தில் சென்றுசந்தித்துப் பேசியுள்ளார். அப்போதெல்லாம் சிபிசிஐடியின் விருந்தினர் புத்தகத்தில் (விசிட்டர்ஸ் புக்) முகம்மதுஅலியை சந்திக்க வந்திருப்பதாக நிஜாமுதீன் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஆரம்பித்தது தெரிந்தவுடன், அந்தப் புத்தகத்தில் நிஜாமுதீன் கையெழுத்திட்டபக்கங்களை எல்லாம் முகம்மது அலி கிழித்து சாட்டியங்களை அழிக்க முயன்றுள்ளார். கிழிக்கப்பட்ட அந்தபக்கங்களை அலியின் மேஜையில் பார்த்தாக சிபிசிஐடி அதிகாரிகள் சிலரே சிபிஐயிடம் வாக்குமூலம்அளித்துள்ளனர்.
இந்த மோசடியில் நிஜாமுதீன் மீது குற்றம் சாட்டி க்யூ பிராஞ்ச் போலீசார் பலமுறை சிபிசிஐடிக்கு தகவல் தந்துள்ளனர்.ஆனால், ஒவ்வொரு முறையும் நிஜாமுதீனை விசாரணைக்கு அழைத்த முகம்மது அலி, அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார்.
ஒரு முறை மிகச் சாதாரண வழக்கை மட்டும் பதிவு செய்து உடனே விடுவித்துள்ளார். விடுவித்தபோது பல கோடிமதிப்புள்ள போலி முத்திரைத் தாள்களை நிஜாமுதீனிடமே திருப்பித் தந்துள்ளார்.
தமிழக சிபிசிஐடி போலீசார் போலி முத்திரைத் தாள் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதை உணர்ந்த கர்நாடகபோலீசார் (இவர்கள் தான் முதன்முதலில் இந்த மோசடியையே கண்டுபிடித்தவர்கள்) சென்னைக்கு வந்துநிஜாமுதீனைக் கைது செய்து ரூ. 170 கோடி மதிப்பிலான முத்திரைத் தாள்களைக் கைப்பற்றிச் சென்றனர்.
இதனால் முகம்மது அலி, அவருக்கு உதவிய சங்கர், எல்ஐசி அதிகாரி சாது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக் கூடாதுஎன்றார் சிபிஐ வழக்கறிஞர் டேனியேல்.
சிபிஐ வழக்கறிஞரின் வாதத்தையடுத்து முகம்மது அலி, சங்கர் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிபதிஅருள்தாஸ் தள்ளுபடி செய்தார்.
எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி சாதுவின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது அவருக்கு ஜாமீன்வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications