ரூ. 1 லட்சம் வரை வருமான வரி விலக்கு
டெல்லி:
மத்திய பட்ஜெட்டில், வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 50,000ல் இருந்து ரூ. 1 லட்சமாகஉயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இனி ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்தவேண்டியதில்லை.
இதனால் சுமார் 1.4 கோடி பேர் பலனடைவர். அதே நேரத்தில், ரூ. 1 லட்சத்துக்கு அதிகமான வருமானம்உள்ளவர்கள் செலுத்தும் வருமான வரியின் மீது 2 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஆரம்பக்கல்வியை தீவிரமாக செயல்படுத்துவதற்காக இந்த 2 சதவீத வரிப் பணம் பயன்படுத்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,வருடத்துக்கு ரூ. 1.5 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ரூ. 19,380 வருமான வரி செலுத்தவேண்டியிருக்கும்.
வருடத்துக்கு ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சம் வரை ஊதியம் பெறுவோர் கூடுதலாக ரூ. 380ம், ரூ. 2 லட்சம்முதல் ரூ. 3 லட்சம் ஊதியம் வாங்குவோர் ரூ. 680 அதிகமாகவும் வரி செலுத்த வேண்டி வரும்.
மாத ஊதியதாரர்களின் நீண்ட காலக் கோரிக்கையான இந்த உச்ச வரம்பு உயர்வை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்தபட்ஜெட்டில் நிறைவேற்றியுள்ளார்.
நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நம் நாட்டில் வெறும் 2.7 கோடி பேர் மட்டுமே வருமான வரிசெலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மாத ஊதியம் வாங்கும் அரசு,தனியார் நிறுவன ஊழியர்கள்.
சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் பிற முக்கிய அம்சங்கள்:
வெளிநாட்டில் இருந்து வரும் அன்பளிப்பு நிதிகளுக்கு இருந்து வந்த வரி விலக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனை ஹவாலா கும்பல்கள் பணப் பரிமாற்றத்துக்காக பயன்படுத்துவதால், இனி ரத்த சம்பந்தம்உள்ளவர்களுக்குத் தான் அன்பளிப்பு நிதிக்கான வரி விலக்கு கிட்ைககும்.
அதே நேரம் திருமணம் உள்ளிட்ட காரியங்களுக்காக உறவினர்கள், நண்பர்களுக்கு பணம் அனுப்பினாலும் வரிவிலக்கு கிடைக்கும்.
வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ஆய்வுப் பணிகளுக்கான செலவுகளுக்கு 150 சதவீத வரி விலக்கு.
பல வகைகளில் உடல் ஊனம் கொண்டவர்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும்.
தொலைத் தொடர்புத்துறையில் 74 சதவீதம் வரையும், விமானப் போக்குவரத்துத்துறையில் 49 சதவீதம் வரையும்,இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் வரையும் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.
தீவிரவாதிகள் தாக்குதல், போரில் மரணடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கான பென்சன் மீதான வருமானவரி ரத்து செய்யப்படுகிறது.
பி.எப். மீதான வட்டி 8 சதவீதமாகவே தொடரும். முதியோரின் முதலீடுகளுக்கு இனி 9 சதவீத வட்டிஅளிக்கப்படும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications