மீண்டும் குறுவையை கைவிடும் தமிழக விவசாயிகள்
தஞ்சாவூர்:
கர்நாடகத்தில் இருந்து உரிய நேரத்தில் வராமல் போனதாலும், மேட்டூரில் இருந்து போதிய நீரை தமிழக அரசுதிறந்து விடாததாலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களைச் சேர்ந்த காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகளில் பெரும்பாலானோர் குறுவை நெல் சாகுபடியை கைவிட்டுவிட்டனர்.
கர்நாடகத்தில் கன மழை பெய்து கபினி அணையில் நீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து உபரி நீரைமட்டும் தமிழகத்துக்குத் திறந்துவிட்டது அம் மாநில அரசு. மழை குறைந்தவுடன் நீரை தேக்கி வைத்துக் கொள்ளஆரம்பித்துவிட்டது.
இதனால் மேட்டூருக்கு போதிய அளவு நீர் வரவில்லை. ஆனால், நாங்கள் சொல்லித் தான் கர்நாடகம் நீரைத்திறந்துவிட்டதாக மத்திய அரசும் அதில் அங்கம் வகிக்கும் திமுகவும் கூறின.
காவிரி தொடர்பாக வழக்கு நடந்து வந்தாலும் கர்நாடகத்துக்கு குழுவை அனுப்பி நீரைப் பெற்றுவிட்டோம்என்றது அதிமுக அரசு.
உண்மையில் உபரி நீரை சாக்கடையைத் திறந்துவிடுவது போலத் தான் தமிழகத்துக்கு கர்நாடகம் தந்தது.இப்போதும் அவ்வப்போது மழை அதிகரித்து நீரைத் தேக்க முடியாதபோதெல்லாம் திடீரென நீரைத்திறந்துவிடுவதும், திடீரென அணையை மூடுவதுமாக கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டிருக்கிறது கர்நாடம்.
மொத்தத்தில் தமிழகத்துக்கு உரிய நேரத்தில் நீர் வந்து சேரவில்லை. அத்தோடு போதிய அளவு நீரும் வரவில்லை.ஆனால், தான் திறந்துவிட்ட உபரி நீரை கணக்கில் வைத்துக் கொண்டு இதுவரை தமிழகத்துக்கு 15 டி.எம்.சி. நீரைத்தந்துவிட்டோம் என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிக் கொண்டுள்ளது கர்நாடகம்.
இந் நிலையில் காலம் தப்பி கர்நாடகம் விட்டு வரும் இந்த நீரை நம்பி குறுவைப் பயிரை நட்டால், பெரும்ஏமாற்றமும் நஷ்டமும் தான் ஏற்படும் என்பதால் அந்த முயற்சியையே பெரும்பாலான காவிரிப் பாசன தமிழகவிவசாசிகள் கைவிட்டுவிட்டனர்.
மேட்டூரில் மேலும் நீரைத் தேக்கி வைத்த பின்னர் ஒரேயடியாக சம்பா நெல்லை பயிரிட்டுக் கொள்ளலாம் என்றமுடிவுக்கு இந்த விவசாயிகள் வந்துள்ளனர்.
இதனால் நான்காவது ஆண்டாக குறுவைப் பயிரை இழந்துள்ளனர் தமிழக விவசாயிகள். அதே நேரத்தில்இன்னொரு பகுதி விவசாயிகள் நடப்பது நடக்கட்டும் என்ற திடமான மனதுடன் குறுவையைப் பயிரிடஆரம்பித்துள்ளனர்.
கர்நாடகத்தில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு, இப்போது தண்ணீர் வந்து கொண்டுள்ளது.தற்போது அணையில் 61 அடி தண்ணீர் உள்ளது. இதை எப்போது வேண்டுமானாலும் கர்நாடகம் நிறுத்தலாம்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டிருந்தால் தான்குறுவை சாகுபடியை மேற்கொள்ள சரியாக இருந்திருக்கும். தற்போது மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர்போதுமானது அல்ல.
மேலும் காலம் தாழ்த்தி இப்போது வந்துள்ள இந்த நீரை நம்பி குறுவையை நட்டால், பயிர்கள் அறுவடைக்குத்தயாராகும்போது தமிழகத்தில் பருவ மழை தொடங்கிவிடும். இதனால் பயிர்கள் நாசமாகி நஷ்டத்தைத்தான்சந்திக்க வேண்டியது வரும்.
எனவே, குறுவையை விட்டுவிட்டு சம்பா சாகுபடியை மேற்கொள்ள இருக்கிறோம் என்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications