புதிய தலைமை செயலகம்: ராஜா போடும் தடை
டெல்லி:
ஒரு நாளைக்கு 10,000 லிட்டர் கழிவு நீரை வெளியேற்றும் கட்டடங்கள் கட்ட மத்திய அரசின்அனுமதியைப் பெற வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்புவெளியிட்டுள்ளது.
இதனால் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பிரம்மாண்டான தலைமைச் செயலகம்கட்டும் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
ரூ. 50 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படும் கட்டடங்கள், 1,000 பேருக்கு மேல்பணியாற்றும் கட்டடங்கள் ஆகியவற்றைக் கட்ட சுற்றுச்சூழல் துறையின் அனுமதி அவசியம் எனஇந்த அறிவிப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விதி இம் மாதம் 7ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டதாகவும் சுற்றுச்சூழல்அறிவித்துள்ளது.
ஏற்கனவே, இந்த விதியை கடந்த ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு மத்திய சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்தபோதே கொண்டு வந்துவிட்டார். அப்போதே ஒரு வரைவு அறிக்கையையும்வெளியிட்டார்.
இப்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இந்தத் துறைதிமுகவைச் சேர்ந்த ஆர்.ராஜாவின் வசம் உள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்ற பிறகே தலைமைச் செயலகத் திட்டத்தைத் தொடங்கலாம்என்ற நிலையில், அந்த அனுமதியைப் பெறாமலேயே ரூ. 500 கோடியில் கட்டடம் கட்டடெண்டர்களை வெளியிட்ட தமிழக அரசு.
இந் நிலையில் தமிழக அரசுக்கு மறைமுக எச்சரிக்கையாக இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல் துறைவெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் தந்த வழிகாட்டுதலின்பேரில் இந்த அறிவிப்புவெளியிடப்படுவதாக சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது.
இதனால் டெண்டர்களை முடிவு செய்து கட்டடம் கட்டும் பணியில் தமிழக அரசு இறங்கினால், சட்டச்சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
அண்ணா அறிவாலயத்தில் மாநகராட்சி விதிப்படி 10 சதவீத நிலத்தை பொது உபயோகத்துக்குவிடாமல் கட்டடம் கட்டியதாக திமுகவுக்கு தமிழக அரசு நெருக்கடி தர ஆரம்பித்துள்ள நிலையில்,தலைமைச் செயலகத்துக்கு செக் வைக்கும் அறிவிப்பை ராஜா வெளியிட்டுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications