பட்ஜெட்: நெசவாளர்கள் வெடிபோட்டு மகிழ்ச்சி
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் சென்வாட் வரி நீக்கப்பட்டதை கோவை, திருப்பூர் பகுதி ஜவுளி அதிபர்கள்,நெசவுத் தொழிலாளர்கள் வெடிகள் போட்டுக் கொண்டாடினர்.
இந்த வரியால் கச்சா நூல் விலை உயர்ந்தது. இதனால் ஜவுளித் தொழில் பெரும் பொருளாதாரசிக்கலில் உள்ளது. லட்சக்கணக்கான கைத்தறி நெசாவாளர்கள் அந்தத் தொழிலையே கைவிடும்நிலைக்குத் தள்ளப்ட்டு வந்தனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இதன் பாதிப்பு நெசவாளர்கள் நிறைந்த கோவை, திருப்பூர், மதுரை,திருச்செங்கோடு பகுதிகளில் மிக அதிகமாக இருந்தது.
இந்த வரியை நீக்குவோம் என கடந்த மக்களவைத் தேர்தலின்போது அனைத்துக் கட்சிகளும்உறுதிமொழி தந்திருந்தன.
இந் நிலையில் திமுக, மதிமுக, பா.ம.க. ஆகிய கட்சிகளின் நெருக்குதலால் இந்த வரியை நீக்கியுள்ளதுமத்திய அரசு. வரி நீக்கப்படுவதாக சிதம்பரம் அறிவித்தவுடனேயே கோவை, திருப்பூர் பகுதிகளில்நெசவாளர்கள் வெடிகள் போட்டுக் கொண்டாடினர்.
இன்றும் இந்தக் கொண்டாடங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. சிதம்பரத்துக்கு நன்றி தெரிவித்துஆயிரக்கணக்கான தந்திகளும் அனுப்பி வருகின்றனர் நெசவாளர்கள்.
வைகோ வரவேற்பு:
பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ஒளி தரக் கூடிய வகையில் இந்த பட்ஜெட்அமைந்துள்ளது.
சென்னை நகரின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க ரூ. 1,000 கோடித் திட்டம், சேது சமுத்திரத் திட்டத்தைநிறைவேற்ற முடிவு என தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளார்நிதியமைச்சர் சிதம்பரம்.
நெசவாளர்கள், விவசாயிகள் நலனைக் காக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த பட்ஜெட். 8ம்வகுப்பு வரை படிப்பும் உணவும் இலவசம், முதியோரின் ஓய்வு கால சேமிப்புக்கு வரி விலக்கு எனபல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
விரைவில் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மையத்தை அமைக்க சிதம்பரம் முன் வர வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல காங்கிரஸ் தலைவர் வாசனும் பட்ஜெட்டை வரவேற்றுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications