போலீஸ் தடையை உடைத்த தாமரைக்கனி!
சென்னை:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் தாமரைக்கனி, 10ம் தேதி அங்குள்ள காமராஜர் சிலை அருகேஉண்ணாவிரதம் இருக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்க்கக் கோரி அனைத்துக் கட்சி கவுன்சிலர்களுடன் சேர்ந்துஉண்ணாவிரதம் இருக்கப் போவதாக தாமரைக்கனி அறிவித்திருந்தார்.
இதுதொடர்பான சுவரொட்டிகளில் அவரது மகனும், அதிமுக அமைச்சருமான இன்பத் தமிழனின் பெயரையும்சேர்த்து அச்சிட்டிருந்தார் தாமரைக்கனி.
இதனால் கடுப்பான இன்பத் தமிழன் கோபமடைந்து தாமரைக்கனியை கண்டித்து அறிக்கை விட்டார். அத்தோடுபோலீஸ் உதவியுடன் தந்தை மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்ய வைத்தார்.
இந் நிலையில் தாமரைக்கனி உண்ணாவிரதம் இருக்க டி.எஸ்.பி. அனுமதி மறுத்தார். இதை எதிர்த்து தாமரைக்கனிஉயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அதில், ஜூலை 10ம் தேதி ஆதி கோவில் ஆனைத்தலையாறு குடிநீர் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழகஅரசை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு டிஎஸ்பி அனுமதி மறுத்துள்ளார். அந்தஉத்தரவை ரத்து செய்து உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம், ஜூலை 10-ம்தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை,ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரதம் இருக்கலாம்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்போர் யார், யார் என்ற பட்டியலை உண்ணாவிரதத்திற்கு முன்பே போலீசாரிடம்தாமரைக்கனி கொடுக்க வேண்டும்.
இந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை டிஎஸ்பி பரிசீலித்து, அதில் உள்ளவர்களை உண்ணாவிரதத்தில் பங்கேற்கஅனுமதிக்கலாம் என்றார் நீதிபதி.


Click it and Unblock the Notifications
