பேய் ஓட்டுவதாக பெண்ணின் கைகளை எரித்த பூசாரி
கடலூர்:
பூஜை என்ற பெயரில் மன நலை பாதிக்கப்பட்ட பெண்ணின் இரு கைகளையும் தீயில் எரித்த சாமியாரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் உறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு கடந்த 1992ம் ஆண்டு திருமணம் நடந்தது.திருமணமான மறுநாளே கணவர் செல்வியைக் கைவிட்டு விட்டார். அன்று முதல் மன நிலைபாதிப்புக்குள்ளாகிவிட்டார் செல்வி.
அவருக்குப் பேய் பிடித்துள்ளதாக கிராமத்தினர் முடிவு செய்து விட்டனர். இந் நிலையில், ஊரில் உள்ள காளிகோவில் பூசாரி ஏழுமலை என்பவர், செல்விக்குப் பேய் ஓட்ட வேண்டுமானால் அவரது கைகளில் சூடத்தை ஏற்றிபூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து செல்வியை அழைத்துச் சென்று காளி கோவிலில் வைத்து பூஜைகள் செய்துள்ளனர். பின்னர் பூசாரிஏழுமலை, செல்வியின் கைகளில் சூடத்தை அள்ளிப் போட்டு தீவைத்துள்ளார். இதில் செல்வியின் இரு கைகளும்எரிந்து விட்டன.
அலறித் துடித்த செல்வியை வேப்பிலையால் அடித்து பேயை ஓட்டுவதாக பூச்சாண்டி காட்டினார் காட்டுமிராண்டிபூசாரி.
கை எரிந்து போன சம்பவம் குறித்து யாரிடம் சொல்லக் கூடாது, மீறி சொன்னால் காளி உங்களை தண்டிப்பாள்என செல்வியையும், அவரது தாயார் கிருஷ்ணவேணியையும் மிரட்டி அனுப்பி வைத்தார்.
ஆனாலும் இந்தத் தகவல் வெளியில் பரவ, ஒருவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார்விரைந்து வந்து பூசாரி ஏழுமலையை கைது செய்தனர்.
செல்விக்கு மன நல சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications