3-ம் திருமணம்: அமெரிக்க கணவர் மீது பெண் புகார்
சென்னை:
அமெரிக்காவில் வசிக்கும் தனது கணவரின் 3ம்து திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு, பெண் ஒருவர் சென்னைகாவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
கோவையைச் சேர்ந்தவர் கமால் முஸ்தபா என்பவரின் மகள் பாத்திமா (27). இவருக்கும் அமெரிக்காவில்பணியாற்றும் காதர் இப்ராஹீம் (30) என்பவருக்கும் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. காதர் இப்ராகிம்சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்.
திருமணத்திற்கு பிறகு 10 நாட்கள் மட்டும் குடித்தனம் நடத்திய காதர் இப்ராகிம் பின்னர் அமெரிக்கா சென்றுவிட்டார். பாத்திமா அவரது பெற்றோருடன் கோவையில் வாழ்ந்து வந்தார்.
இந் நிலையில் பாத்திமா சென்னை காவல்துறை ஆணையர் நடராஜனை சந்தித்து, தனது கணவர் காதர் மீது ஒருபுகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறி இருப்பதாவது:-
எனது கணவர் ஏற்கனவே ஒரு முறை விவாகரத்து ஆனவர். நானும் எனது உறவுக்காரரை மணந்து பின்புவிவாகரத்து பெற்றுவிட்டேன். அதன்பின்புதான் எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது. அவர்அமெரிக்காவில் என்ஜினீயராக பணிபுரிவதாகக் கூறித்தான், வரதட்சணையாக ரூ.1.41 லட்சமும், 150 சவரன்நகையும் பெற்றார்கள்.
ஆனால், அவர் 10ம் வகுப்பு தான் படித்திருக்கிறார் என்றும், அமெரிக்காவில் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார்என்றும் தெரிய வந்தது. இருப்பினும் இதைப் பெரிது படுத்தாமல் விட்டு விட்டேன்.
இந் நிலையில் திருவாரூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை 3-வது திருமணம் செய்ய என் கணவர் முயற்சிப்பதாக தகவல்கிடைத்துள்ளது. இது குறித்து என் கேள்விகளுக்கு கணவர் பதில் தர மறுக்கிறார். ஆனால், திருமணத்துக்கானஏற்பாடுகளை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார்.
இந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தி எனக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் என்றுகோரியுள்ளார் பாத்திமா.
புகாரைப் பெற்றுக் கொண்ட கமிஷனர் நடராஜன் இது குறித்து விசாரிக்குமாறு உதவி கமிஷனர் காளி,இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications