லஞ்சப் பணத்தை ரோட்டில் வீசிய ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.) லஞ்ச ஒழிப்புத்துறைபோலீசாரர்ல் நடத்தப்பட்ட ரெய்டின்போது கோவை மற்றும் ஸ்ரீரங்கம் அலுவலகங்களில் ரூ. 47,000லஞ்சப் பணத்தை ஊழியர்கள் தூக்கி வெளியில் வீசினர்.

போலீசார் ரெய்டை ஆரம்பித்த சிறிது நேரத்தில் கோவை ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் வாயிலில் 3பைகள் வீசப்பட்டன. அதில் ரூ. 27,000ம் இருந்தது.

அதே போல ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. அலுவலக வாசலில் ரூ. 20,000 ஒரு பையில் கட்டிவீசப்பட்டிருந்தது.

போலீசார் ரெய்ட் நடத்தும்போது தங்களிடம் இருக்கும் லஞ்சப் பணத்துக்கு கணக்கு காட்ட முடியாதுஎன்பதால் அதனை ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள், கிளர்க்குகள், பியூன்கள் ஆகியோர் தூக்கிவெளியில் வீசி விட்டனர்.

மதுரையில் சமீபத்தில் ரெய்ட் நடந்தபோது லஞ்சப் பணத்தை கிழித்து, ஜன்னல் வழியாக குப்பைத்தொட்டியில் ஆர்.டி.ஓ. ஊழியர்கள் வீசியது நினைவுகூறத்தக்கது.

ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்களுக்கு சமீபகாலமாக ஒரு உத்தரவு அமலில் உள்ளது. காலையில்ஊழியர்கள் அலுவலகத்துக்கு வரும்போது கொண்டு வரும் பணத்தின் விவரத்தை பதிவு செய்யவேண்டும்.

இதன்மூலம் அவர்களிடம் ரெய்ட் நடத்தும்போது சிக்கும் கூடுதல் பணம் லஞ்சம் என்று கணக்கில்கொள்ளப்படும்.

இதனால், லஞ்சத்தை இப்போதெல்லாம் ஊழியர்கள் நேரில் பெறுவதை தவிர்த்து விடுகின்றனர்.புரோக்கர்கள் மூலமே பெற்று, அதை அவர்கள் வசமே கொடுத்து வைப்பதும், ஆர்.டி.ஓ.அலுவலகங்களுக்கு வெளியில் உள்ள டீக் கடைகள், பெட்டிக் கடைகளில் லஞ்ச பேரத்தைப் பேசி,

பண பரிவர்த்தனைகளை நடத்தி, அங்கேயே லஞ்சப் பணத்தை பதுக்கி வைத்து மாலையில்மொத்தமாக வசூல் செய்து கொண்டு வீட்டுக்குப் போவதுமாக உள்ளனர்.

பல ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் செல்போன்கள் மூலமே லஞ்ச பேரம் நடக்கிறது. இதற்காக டீக்கடைக்காரர்களுக்கு செல்போன்களை ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர்களே வாங்கித் தந்துள்ளனர்.

தங்களிடம் அலுவலக வேலை நிமித்தமாக வருபவர்களை, இந்தக் கடைகளுக்கு அனுப்பும்ஊழியர்கள், அவரிடம் இவ்வளவு பணத்தை வசூல் செய்து கொள்ளுமாறு தங்களிடம் உள்ளசெல்போன்கள் மூலமாக மேஜையில் உட்கார்ந்தபடியே தகவல் தருகின்றனர்.

இதிலேயே பேரம் பேசி முடிக்கப்படுகிறது.

நேற்று நடத்தப்பட்ட ரெய்டில் சில புரோக்கர்களையும் போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.அப்போது கோவையில் சிக்கிய இரு புரோக்கர்களிடம் ரூ. 12,000மும் நெல்லையில்புரோக்கர்களிடம் ரூ. 8,000மும் சிக்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+