அறிவாலய நிலத்தை பூங்காவாக்க மாநகராட்சி முடிவு
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள திமுக தலையைகமான அண்ணா அறிவாலயத்தின் முன்புறம் உள்ளசர்ச்சைக்கிடமான இடத்தைக் கைப்பற்றி அங்கு முழுமையான பூங்காவை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
சென்னை மாநகராட்சி விதிமுறைகளின்படி 10,000 சதுர அடிக்கு மேலான கட்டடம் கட்டப்படும்போது, அதற்குமுன்பு குறிப்பிட்ட இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். அது பொதுவான இடமாகபயன்படுத்தப்படும்.
ஆனால் திமுக தலைமையகான அண்ணா அறிவாலயம் கட்டப்பட்டபோது, விதிமுறைப்படி காலியிடம்மாநகராட்சியிடம் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக அந்த இடத்தை தாங்களே பூங்காவாக பராமரிப்பதாகமாநகராட்சியிடம் திமுக அறக்கட்டளை தெரிவித்திருந்தது.
இருப்பினும் அது பூங்காவாக பராமரிக்கப்படவில்லை. மாறாக அங்கு அண்ணா சிலை வைக்கப்பட்டு,திமுகவினரின் வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந் நிலையில் சம்பந்தப்பட்ட இடப் பிரச்சினையை சமீபத்திய மாநகராட்சி கூட்டத்தில் அதிமுகவினர் கிளப்பினர்.மேலும் அந்த இடம் குறித்து திமுக அறக்கட்டளைத் தலைவரான திமுக தலைவர் கருணாநிதிக்கு விளக்கம் கேட்டுமாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தற்போது இந்தப் பிரச்சினையை வேறு விதமாக கையாள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சர்ச்சைக்குரியஇடத்தைக் கைப்பற்றி அங்கு முழுமையான பூங்கா அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடசென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு மாநகராட்சிசார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அண்ணா அறிவாலய வளாகம் உள்ளிட்ட சென்னை நகரில் 3இடங்களில் பூங்காக்கள் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பிரிவின் கீழ் முழுமையான பூங்கா அமைக்க நடவடிக்கைஎடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதனால் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா அறிவாலய வளாகம் அதிரடியாககைப்பற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய இடத்தில் தாங்களே முழுமையான பூங்காவை அமைக்க திமுக அறக்கட்டளை முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு பூங்கா அமைக்கும்நிறுவனத்திடம் திமுக அறக்கட்டளை ஆலோசனை கேட்டுள்ளது.
அம்பத்தூர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் 2 நாட்களுக்கு முன்பு அறிவாலயம் வந்து சம்பந்தப்பட்ட இடத்தைப்பார்வையிட்டு அங்கு பூங்கா அமைப்பது தொடர்பான திட்டம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications