பள்ளியில் பயங்கர தீ விபத்து-: 80 குழந்தைகள் பலி
கும்பகோணம்:
கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 80 க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிமாணவ, மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக உயிழந்தனர். இதில் 33 பேர் மாணவிகள், 27 பேர் மாணவர்கள்.மேலும் 20 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிவிட்டன.
நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் பலத்த தீக் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இறந்த குழந்தைகள் அனைவரும் 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் 10 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் பகவான் கிருஷ்ணா பெண்கள் நடுநிலைப் பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி ஆரம்பப் பள்ளி ஆகியவை உள்ளன. இரண்டு மாடிக் கட்டடத்தில் இவை அமைந்துள்ளன.
தரைத் தளத்தில் உயர் நிலைப் பள்ளி வகுப்புகளும், முதல் தளத்தில் நடுநிலைப் பள்ளி வகுப்புகளும், கூரையால்வேயப்பட்ட மேல் தளத்தில் சரஸ்வதி ஆரம்பப் பள்ளியின் வகுப்புகளும் இயங்கி வருகின்றன. பெண்கள்பள்ளியாக இருந்தாலும் ஆரம்பப் பள்ளியில் மட்டும் மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மூன்று தளங்களிலும் சேர்த்து சுமார் 900 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கூரை வேயப்பட்ட ஆரம்பப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.
இந்தக் கட்டடத்தின் மிக அருகே பள்ளியின் சத்துணவுக் கூடம் உள்ளது. இங்கிருந்து கிளம்பிய தீப் பொறிகள் மேல்தளத்தில் உள்ள கூரையில் விழுந்தன. பலத்த காற்றும் வீசியதால் காலை 11.30 மணியளவில் அந்தக் கூரையில் தீப்பிடித்துக் கொண்டது.
கட்டடத்தின் மேல் தீப் பிடித்துக் கொண்டதைப் பார்த்த சில மாணவ, மாணவிகள் கூச்சல் போடவே, தரைத்தளத்திலும், முதல் தளத்திலும் இருந்த நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி மாணவிகள் வேகமாக வகுப்புகளைவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டனர்.
ஆனால், மேல் தளத்தில் இருந்த 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 8, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளால்உடனே ஓட முடியவில்லை. தங்கள் தலைக்கு மேல் தீ எரிவதைக் கண்ட பிஞ்சுகள் தப்பிக்க முயலவில்லை.
இந் நிலையில் கூரை முழுவதும் தீ பரவி, முழுக் கூரையும் தீயுடன் அப்படியே குழந்தைகள் மீது விழுந்துள்ளது.இதனால் பல மாணவிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சிறுமிகள் கதறித் துடித்துக் கொண்டிருக்க, மளமளவென எல்லா பக்கமும் பரவியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானகுழந்தைகளும் ஆசிரியர்களும் சிக்கிக் கொண்டனர்.
வகுப்பறைகளில் இருந்து வெளியேறும் வழியும், மாடிப் படிகளும் மிகக் குறுகலாக இருந்ததால் நெருக்கியடிக்குக்கொண்டு ஓடி வந்த மாணவிகளும் நிலை தடுமாறி விழுந்தனர். அதற்குள் தீயின் நாக்குகள் பரவியதாலும், புகைமூட்டம் ஏற்பட்டதாலும் குழந்தைகள் மயங்கி விழ, தொடர்ந்து வந்த தீக்கு பலியாகிவிட்டனர்.
தீ பரவியதும் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்று தோற்ற ஆசிரியர்கள் காயங்களுடன் தப்பிவிட்டனர்.(முன்னதாக சில ஆசிரியர்களும் பலியானதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதை மாவட்ட கலெக்டர்ராதாகிருஷ்ணன் மறுத்தார்).
தீயணைப்புப் படையினர் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைக்க பள்ளிக்குள் நுழைய முயன்றனர்.ஆனால் தீ மிக பயங்கரமாக எரிந்ததால் தீயணைப்பு வண்டிகளால் உள்ளே நுழைய முடியவில்லை. தீயணைப்புவீரர்களும் உள்ளே நுழைய முடியாமல் தவித்தனர்.
பின்னர் கிரேன்களின் உதவியால் பள்ளியின் சுவர்களை உடைத்துக் கொண்டு தீயணைப்புப் படையினர் உள்ளேநுழைந்தனர். கும்பகோணம், தஞ்சாவூர், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும்தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன.
மிகுந்து சிரமத்துக்குப் பின்னரே தீயை அணைக்கும் பணியை அவர்களால் தொடங்க முடிந்தது. 2 மணி நேர கடும்போராட்டத்துக்குப் பின்னரே தீ அணைக்கப்பட்டது.
ஆனால் அதற்குள் 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பரிதாபமாக கருகி இறந்துவிட்டனர். தீ எரிந்தபோதுஓடி வந்த பல குழந்தைகளின் பெற்றோர்கள் தீயையும் மீறிக் கொண்டு பள்ளிக்குள் நுழைய முயன்றனர்.அவர்களை மற்றவர்கள் தடுத்துவிட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த 27 குழந்தைகள் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளிலும்மேலும் பல மாணவ, மாணவிகள் பல தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5பேர் பலியானதையடுத்து சாவு எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துவிட்டது.
அண்டை மாவட்டங்களில் இருந்து அரசு டாக்டர்கள் கும்பகோணத்துக்கு விரைந்துள்ளனர். பலரது நிலைமைகவலைக்கிடமாக உள்ளாதால் உயிர்ப் பலிகள் நூறைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.
1992ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 60 பேர் பலியாயினர். அதன்பிறகு இந்த கோவில் நகரத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய கோர சம்பவம் இது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications