உயிர்களைக் குடித்த கூரை, குறுகலான படிகள்
கும்பகோணம்:
பள்ளியின் கூரையில் தீ பரவியபோது,மாணவ, மாணவிகள் பலர் எழுந்து ஓட முயன்றதாகவும்,ஆனால் யாரும் ஓட வேண்டாம், அவரவர் இடத்திலேயே உட்காருங்கள் என ஆசிரியை கூறியதால்,அவர்கள் அங்கேயே உட்கார்ந்து தீயில் கருகியதாகவும் கூறப்படுகிறது.
போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
இது சாதாராண தீ தான், அது அணைந்துவிடும் என ஆசிரியை கூறியதாக தப்பி வந்த ஒரு மாணவிபோலீசாரிடம் கூறியிருக்கிறாள்.
கடந்த ஜனவரி மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர்பலியானதையடுத்து தமிழகத்தில் நடந்துள்ள மிகப் பெரிய தீ விபத்து இது தான்.
ஸ்ரீரங்கம் தீ விபத்துக்கு மாடியில் போடப்பட்டிருந்த கூரையும், பிளாஸ்டிக் சேர்களும் எமன்களாக அமைந்தன.கூரையில் பிடித்த தீ, கீழே பரவி பிளாஸ்டிக் சேர்களும் எரிந்ததில் கல்யாண மண்டபத்தில் இருந்த மாப்பிள்ளைஉள்பட 59 பேர் பலியாயினர்.
மேலும் மண்டபத்தின் வாசல்களும், மண்டபம் இருந்த தெருவும் மிகக் குறுகலாக இருந்ததால் தப்பியோடமுடியாமல் பலர் தீக்கு பலியாயினர்.
இதையடுத்து திருமண மண்டபங்களின் அமைப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக சில விதிகளைதமிழக அரசு கொண்டு வந்தது. மேலும் பொதுக் கட்டடங்களில் தீயணைப்புக் கருவிகள் இருக்க வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டது.
ஆனால், பள்ளிகளுக்கு இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இந் நிலையில் அதை போன்ற கூரைவேயப்பட்ட மாடி, குறுகலாக மாடிப் படிகள் ஆகிய காரணங்களால் சுமார் 80 மாணவிகள் பலியாகியுள்ளனர்.
மாடியில் இருந்த வகுப்பறைகள் கீற்றுக் கொட்டகையால் ஆனது என்பதாலும், படிகள் மிகவும் குறுகியதுஎன்பதாலும் தீ விபத்துக்குப் பின்னர் மாணவிகளாலும், ஆசியர்களாலும் வெளியேற முடியாமல் போய் விட்டது.
மேலும் தீயணைப்பு வண்டிகளாலும் உள்ளே நுழைந்து தீயை அணைக்க முடியவில்லை. காரணம், பள்ளியின்நுழைவு வாயில் அவ்வளவு குறுகியது.
1 முதல் 5ம் வகுப்புப் பயிலும் எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான வகுப்பறைகளை எதற்காகஇரண்டாவது மாடியில் போய் வைத்தார்கள் என்று புரியவே இல்லை.
இதற்கிடையே எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்தப் பள்ளிக்கு அனுமதி தந்த 4 கல்வித்துறை அதிகாரிகளைசஸ்பெண்ட் செய்து இன்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications