மருத்துவ கல்லூரி விவகாரம்: இன்று முடிவு
டெல்லி:
தூத்துக்குடி, கன்னியாகுமாரி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, நெல்லை மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களை ஒதுக்குவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் இன்று முடிவுஎடுக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டுமாணவர்களைச் (100 இடங்கள்) சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளிக்க மறுத்துவிட்டது.
அதேபோல், கன்னியாகுமரியில் இந்த ஆண்டு புதிய மருத்துவக் கல்லூரியைத் திறக்கவும், திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கான அனுமதியை வழங்க உதவுமாறு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர்மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதேபோல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் டெல்லியில் அன்புமணியைச் சந்தித்து கோரிக்கைவிடுத்தார். இதனையடுத்து, இந்தக் கல்லூரிகளுக்கு விதிக்கப்ப்டட தடை குறித்து மறுபரிசீலனை செய்யுமாறுமருத்துவக் கவுன்சிலுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே இந்த மருத்துவக் கல்லூரிகளில், விதிமுறைகளின்படி உள்கட்டமைப்பு வசதிகள் விரைவில்ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்தது. இந் நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் இன்றுகூடி இது தொடர்பாக தனது முடிவை அறிவிக்கிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications