24 கற்பழிப்பு கொலைகள்: கொடூரனுக்கு ஆயுள்
வேலூர்:
24 பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்ததற்காக தூக்குத் தண்டனை பெற்ற கொலையாளிக்கு, 25வது கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பண்டகபள்ளியைச் சேர்ந்த நாகராஜன் என்ற ராஜா சாகிப் (40) என்பவன் அந்தக் காமக்கொடூரன். நாகராஜன் செய்த முதல் கொலை, பெங்களூர் மடிவாலா பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (17). பெங்களூர்மெஜஸ்டிக்கில் சினிமா பார்த்து விட்டு தனியாக வீட்டுக்கு வந்து கொண்டு இருந்த சுமதியை வழிமறித்தநாகராஜன், நைச்சியமாகப் பேசி ஒரு புதர் மறைவில் அழைத்து சென்று கற்பழித்தான். பின்னர் சுமதியின் கழுத்தைநெறித்துக் கொலை செய்து பிணத்தை புதர் மறைவில் வீசி விட்டு தப்பி ஓடிவிட்டான். இது நடந்தது 1989ம் ஆண்டுமே 19ம் தேதி.
இதன் பின்பு அவன் கற்பழித்துக் கொலை செய்த பெண்களின் எண்ணிக்கை 23. 1989ம் ஆண்டு தர்மபுரிவெங்கடேஷ் என்பவரது மனைவி சரஸ்வதி (32), 1990--91ல் பெங்களூர் ஜெயம்மா (20), கவுரம்மா (30),கே.ஜி.எப். பகுதியைச் சேர்ந்த நூர்ஜகான் (25), அவரது கணவன் பாஷா (35), தர்மபுரி தவமணி (27),கோவிந்தம்மாள் (52) ஆகியோரைக் கொலை செய்தான். நாகராஜன் கற்பழித்துக் கொலை செய்த மேலும் 16பேருடைய உடல் அடையாளம் தெரியவில்லை.
பெண்களை நைசாகப் பேசி தனியாக அழைத்து சென்று கற்பழித்துக் கொலை செய்வதுதான் நாகராஜின் பாணி.கொலைக்குப் பின் பிணத்தை நிர்வாணப்படுத்தி ஏதாவது புதர் மறைவில் வீசிவிட்டு சென்று விடுவான். உடலில்நகைகள் ஏதாவது இருந்தால் அதையும் எடுத்துக் கொள்வான்.
நாகராஜனின் கொலை வழக்குகளில் சாட்சிகளே கிடையாது. கே.ஜி.எப்பை சேர்ந்த நூர்ஜகானைக் கற்பழித்துகொலை செய்தபோது அதைப் பார்த்த அவரது கணவர் பாஷாவையும் கொலை செய்து விட்டான். கொலைசெய்யப்பட்டவர்களில் 7 பேர் தர்மபுரி, 5 பேர் கோலார் தங்கவயல், 11 பேர் பெங்களூர், 2 பேர் ஒகேனக்கல்பகுதியைச் சேர்ந்தவர்கள்.
எந்த வழக்கிலும் சிக்காமல் தப்பித்து வந்த நாகராஜன், கடைசியில் தன் மனைவி ஒன்னம்மாளின் அக்காவையும்,தங்கையையும் கொலை செய்தபோது போலீசாரிடம் சிக்கினான். அதன்பின்தான் இதற்கு முன் பல்வேறுபெண்களைக் கற்பழித்துக் கொலை செய்தது போலீசுக்குத் தெரிய வந்தது. 1994-ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிபெங்களூர் நீதிமன்றம் நாகராஜனுக்கு தூக்கு தண்டனை விதித்தது.
இதற்கிடையே வாணியம்பாடியை அருகே உள்ள மோதகபள்ளியைச் சேர்ந்த சுசீலா (35) என்ற பெண்ணை வேலூர்மாவட்ட செசன்ஷ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தக் கொலையில் சுசீலாவை நாகராஜன் மப்ளர் மூலம்கழுத்தை இறுக்கி கொன்றிருந்தான்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜனுக்கு நேற்று ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்ததண்டணையையும், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறுஉத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications