வைகோ வழக்கு: விசாரணைக்கு தடை நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக வைகோகடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்அடைக்கப்பட்டார். ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் கழித்த வைகோ, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இதற்கிடையே நீதிபதி சகாரியா தலைமையில் அமைக்கப்பட்ட பொடா மறு ஆய்வுக் குழு வைகோ மீதானவழக்கை பரிசீலித்து, பொடா சட்டத்தின் கீழ் வைகோ மீது வழக்கு தொடர எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லைஎன தீர்ப்பு கூறியது. அதன் அடிப்படையில் பொடா வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு சென்னைஉயர்நீதிமன்றத்தில் வைகோ மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மறு ஆய்வுகுழுவின் சிபாரிசு தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இதனையடுத்து, பொடா வழக்கை தனி நீதி மன்றம் விசாரிக்க கூடாது; வழக்கிலிருந்து தன்னை விடுதலை செய்யதமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரியவா, நீதிபதி அரிஜித் பஸ்யாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,

வைகோ மீதான பொடா வழக்கு விசாரணை நடத்த தடை விதித்தோடு, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறுதமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+