கருப்பு தினம் அனுசரிக்க சென்னை வழக்கறிஞர்கள் முடிவு
சென்னை:
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படவுள்ள இம்மாதம் 24ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
மதுரையில் திட்டமிட்டபடி ஜூலை 24ம் தேதி உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. மேலும், நாகை, பெரம்பலூர் மாவட்டங்கள் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்துடன் தொடர்ந்துநீடிக்கும் என்றும் குடியரசுத் தலைவர் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற மாவட்டங்கள் தொடர்ந்து மதுரைகிளையுடன் நீடிக்கும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப்பின்னர் சங்கத் தலைவர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜூலை 24ம் தேதி திட்டமிட்டபடி மதுரைகிளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த நாளை நாங்கள் கருப்பு நாளாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் கருப்பு பட்டைஅணிந்து வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும் மதுரைகிளை திறக்கப்படவுள்ள 24ம் தேதி வரை நீதிமன்றப் புறக்கணிப்பிலும் ஈடுபடவுள்ளோம்.
இதேபோல, சர்ச்சைக்குரிய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், பெரம்பலூர், கரூர், திருச்சி மாவட்ட வழக்குகள்அடங்கிய கோப்புகளை மதுரைக்கு அனுப்பக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
மதுரையில் நடைபெறவுள்ள கிளை திறப்பு விழாவை புறக்கணிக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களதுமுடிவுக்கு மாநிலம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் ஆதரவு தர வேண்டும். அவர்களும் நீதிமன்றப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications