படப்பிடிப்புகள் ரத்து; ரஜினி, விஜயகாந்த் இரங்கல்
சென்னை:
கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்தில் 80க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பரிதாபமாக இறந்துள்ளது குறித்துநடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், மனிததெய்வங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடுமை அறிந்து வேதனையுற்றேன். அந்தக் குழந்தைகளை இழந்துதவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்திற்கு அப்பாவி சிறுவர்,சிறுமியர் பலியான தகவல் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குழந்தைகளை இழந்துதவிக்கும் பெற்றோர்களுக்கு எனது அனுதாபத்தையும், இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது தனிப்பட்ட முறையில் ரூ. 10 லட்சம் நிவாரணத்தொகையை வழங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்றுதமிழகத்தில் திரைப்படப் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், நடிகர் சங்கம் சார்பில் நடிகர்,நடிகையர்கள் கலந்து கொள்ளும் இரங்கல் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications