கண்ணீர் விட்டு அழுத ஜெயலலிதா !
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் காயமடைந்த பச்சிளம் குழந்தைகளைப் பார்வையிட்டு ஆறுதல் கூறிய முதல்வர்ஜெயலலிதா கண்ணீர் விட்டு அழுதார்.
கல் மனதையும் கரைய வைக்கும் அளவுக்கு மிகப் பெரிய கொடூரத்துக்கு ஆளாகியுள்ளது கும்பகோணம். பள்ளிக்கூடத்திற்கு சென்ற ஒன்றுமறியாத அப்பாவிக் குழந்தைகள் கரிக் கட்டைகளாக கிடந்ததைப் பார்த்த அத்தனைபேரும் கதறி அழுதனர்.
கிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த குழந்தைகள் கும்பகோணம் அரசுமருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை ஜெயலலிதா சந்தித்து ஆறுதல்கூறினார்.
தீயில் வெந்து போய் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்ததும் அவர் கண்களில்கண்ணீர் வழிந்தது. கண்களைத் துடைத்தவாறே அவர் ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வளவு பிள்ளைகள் படித்துள்ள பள்ளிக்கு ஒரே ஒரு குறுகிய வழிமட்டுமே இருந்ததை அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன். இந்தப் பள்ளிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இத்தகைய பள்ளி குறித்து அலட்சியமாக இருந்துள்ள மாவட்ட உதவி கல்வி அதிகாரி, தொடக்கப்பள்ளி கல்விஅதிகாரி, மாவட்ட தலைமை கல்வி அதிகாரி ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி நிர்வாகிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கூடத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும்உத்தரவிட்டுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
இதேபோல, மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும் காயமடைந்தசிறுவர், சிறுமியரைப் பார்த்து அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் இரங்கல் செய்தியை படித்துக் காட்டிய தயாநிதி மாறன், மத்திய அரசு காயமடைந்தசிறுவர், சிறுமியர்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications