ஆசிரியர்கள் அலட்சியத்தால் அதிக உயிர் பலி
கும்பகோணம்:
தீவிபத்து நடந்தபோது, ஆசிரியர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் 3வது மாடியில் இருந்தகுழந்தைகள் குறித்துக் கவலைப்படாமல் தப்பி ஓடி விட்டதால்தான் அதிக உயிர்கள் பலியாக நேரிட்டு விட்டதாகபொதுமக்கள் குமுறுகின்றனர்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்த தீவிபத்தின் கொடுமைகள் இன்னும் மக்களை அதிர்ச்சியிலிருந்து மீளவிடவில்லை. தீவிபத்தின்போது அதை நேரில் பார்த்த சிலர் கொடுத்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாகஉள்ளது.
தீவிபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், பள்ளிக் கூடத்தின் முதல் மாடியில் தீப்பற்றிக் கொண்டதை நான்நேரில் பார்த்தேன். உடனடியாக பள்ளிக் கூடத்திற்கு அருகில் இருந்த வீட்டின் வழியாக பள்ளிக் கூடத்தின் மேல்மாடிக்கு செல்ல முயன்றேன்.
அப்போது முதல் மற்றும் இரண்டாவது மாடியிலிருந்த மாணவிகள் வெளியே ஓடிக் கொண்டிருந்தனர்,அவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் ஓடினர். அவர்களிடம் 3-வது மாடியில் இருந்த நர்சரி பிள்ளைகள் தப்பிவிட்டார்களா என்று கேட்டபோது, அவர்களும் தப்பி விட்டதாக தெரிவித்து விட்டு அவர்கள் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள ஓடினர்.
ஆனால் 3-வது மாடியின் சுவரை இடித்து சென்று உள்ளே பார்த்தபோதுதான் 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள்கரிக்கட்டை போல கருகிக் கிடந்ததைப் பார்த்தோம். எங்களது நெஞ்சே வெடித்து விட்டது என்றார் கண்ணீருடன்.
இதேபோல, முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்டவுடன் அதைப் பார்த்து 3வது மாடியிலிருந்து பிள்ளைகள் பயந்துபோய் கூச்சல் போட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்த ஒரு ஆசிரியை, சாதாரண தீ தான், பயப்படாமல் அமருங்கள்என்று கூறி வெளியேற முயன்ற குழந்தைகளைத் தடுத்து உட்கார வைத்துள்ளார். ஆனால் அவர் சொன்ன அடுத்தசில நிமிடங்களிலேயே அத்தனை பேரும் தீக்கு இரையாகி விட்டனர்.
3வது மாடியிலிருந்து கைப்பற்றப்பட்ட சடலங்கள் அனைத்துமே குழந்தைகளுடையதுதான். இதுவரை ஒருஆசிரியரின் சடலம் கூட கிடைக்கவில்லை என்பது இவர்களது வாதத்தை உண்மையாக்கும் விதத்தில் உள்ளது.
ஆசிரியர்கள் நினைத்திருந்தால் சில குழந்தைகளை நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் பொதுமக்கள்குமுறுகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications