தமிழ் திரையுலகம் ரூ. 42 லட்சம் நிதியுதவி
சென்னை:
கும்பகோணம் தீவிபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழ்திரையுலகம் சார்பில் ரூ. 30 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது. நடிகர் கமல் அதிகபட்சமாக ரூ.12 லட்சம் நிதியுதவிஅளித்துள்ளார்.
கும்பகோணம் தீவிபத்து தொடர்பான இரங்கல் கூட்டத்திற்கு தமிழ் திரையுலகின் பல்வேறு சங்கங்கள் சார்பில்சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி கூட்டமைப்புஉள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ், சிவக்குமார், சூர்யா, அர்ஜூன், செந்தில், ராஜேஷ்,சிபிராஜ், ரமேஷ் கண்ணா,தியாகு, செந்தில், நடிகைகள் ஸ்ரீபிரியா, சச்சு, மனோரமா உள்ளிட்டோரும்,இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், சேரன் உள்ளிட்டோரும், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய்காந்த், சரத்குமார் ஆகியோர் பேசுகையில் கண்களில் நீர் தளும்ப பேசினர். நடிகைமனோரமா வாய் விட்டு அழுதார். மற்றவர்களும் கண்களில் நீர் மல்கப் பேசினர்.
நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் இதுபோன்ற சம்பவங்களில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவ நிதியம்ஏற்படுத்த வேண்டும் என்று திரையுலகைக் கேட்டுக் கொண்டார். அதற்காக ஒவ்வொரு படத்தின்போதும் ரூ. 5லட்சம் தருவதாகவும் உறுதியளித்தார்.
பின்னர் நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கும்பகோணம் விபத்தில் இறந்தவர்களின்குடும்பங்களுக்கு உதவ நிதியுதவி அளிப்பதாக அறிவித்தனர். சத்யராஜ் ரூ. 1 லட்சம், சிவக்குமார்-சூர்யா ரூ. 2லட்சம், அர்ஜூன் ரூ. 1 லட்சம், பாரதிராஜா ரூ. 25,000, சேரன் ரூ. 3.24 லட்சம், தயாரிப்பாளர் சங்கம் ரூ. 10 லட்சம்,எஸ்.ஏ.சந்திரசேகர் ரூ. 1 லட்சம், நெப்போலியன் ரூ. 1லட்சம்;
ஆர்.பி.செளத்ரி ரூ. 25,000, பி.வாசு ரூ. 25,000, கே.எஸ்.ரவிக்குார் ரூ. 1 லட்சம், ஆர்.சுந்தரராஜன் ரூ. 10,000,அலெக்ஸ் ரூ. 20,000 என பலரும் நிதியளித்தனர். மொத்தமாக ரூ. 30 லட்சம் திரட்டப்பட்டது.
இந்த நிதி முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டு அதன் மூலம் கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு வழங்கப்படும் என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தென்கொரிய பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் கமல், விபத்து குறித்து அறிந்து ரூ.12 லட்சம்நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications