தமிழக அமைச்சரவை, பள்ளிகளில் இரங்கல்
சென்னை:
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த 90 குழந்தைகளின் நினைவாக இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில்கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தமிழகத்தில் உள்ளபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்று காலை அனைத்துப் பள்ளிகளிலும் கும்பகோணம்குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்புப் பிரார்த்தனைகள், சர்வ மத பிராத்தனைகள் நடத்தப்பட்டன.எல்லா பள்ளிகளின் நுழைவு வாயிலில், உயிரிழந்த குழந்தைகளுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி என்றுகரும்பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் கும்பகோணம்குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜெயலலிதா மற்றும்அமைச்சர்கள் 2 நிமிட நேரம் எழுந்து நின்று அமைதி அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணத்தில் தீவிபத்து நடந்த கிருஷ்ணா பள்ளிக்கு அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன்தலைமையில் அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பரமசிவன் மற்றும்பொதுமக்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.
புதுவை சட்டசபை இன்று காலை கூடியதும், கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும்தீர்மானத்தை சபாநாயகர் ராமச்சந்திரன் கொண்டு வந்தார். பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிட நேரம்எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக முதல்வர் இரங்கல்:
இதற்கிடையே கர்நாடக முதல்வர் தரம்சிங் தனது இரங்கல் செய்தியை ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார். அவர்ஜெயலதாவுக்கு எழுதிய கடிதத்தில்,
கும்பகோணம் சம்பவத்தைக் கேள்விப்பட்டு நான் பலத்த அதிர்ச்சி அடைந்தேன். அப்போது என் மனம் அடைந்தவேதனையையும், துக்கத்தையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இந்த விபத்தில் இறந்த குழந்தைகளின்பெற்றோர்களுக்கும், காயமடைந்த குழந்தைகளுக்கும் கர்நாடக மக்களின் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கொடூர சம்பவத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை அவர்களுக்குக் கொடுக்கும்படி இறைவனிடம் நான்பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications