வேதனையில் உள்ளோம்: ஆசிரியைகள் பேட்டி
கும்பகோணம்:
90 குழந்தைகள் தீயில் கருகி இறந்தது எங்களையும் கடுமையாக பாதித்துள்ளது. 700க்கும் மேற்பட்ட குழந்தைகள்தப்ப உதவிய எங்களை வில்லன் போல பொதுமக்களும், போலீஸாரும் நினைப்பது எங்களை வேதனையில்ஆழ்த்தியுள்ளது என, தலைமறைவாக உள்ள கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியைச் சேர்ந்த சில ஆசிரியைகள்கூறியுள்ளனர்.
பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது சில ஆசிரியைகள் குழந்தைகள் அப்படியே அமர்ந்திருக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டதாகவும், அதற்குக் கீழ்படிந்து ஓடாமல் உட்கார்ந்ததால் தான் பெரும்பாலான குழந்தைகள்பலியானதாகவும் கூறப்படுகிறது.
அதே போல பள்ளி தொடங்கியதும், வெளிக் கதவை பூட்டி வைத்த ஆசிரியையகள், தீ விபத்து ஏற்பட்டவுடன்அதைத் திறக்கச் சொல்லாமல் விட்டதால், பல குழந்தைகள் தீக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து பலியாகியுள்ளனர்.
மேலும் தங்களை மட்டும் காத்துக் கொண்ட ஆசிரியையகள் மாணவ, மாணவிகளை காப்பாற்றவில்லை என்றும்புகார் கூறப்படுகிறது. அதே நேரத்தில் உயிர் தப்பிய சில மாணவிகள் தங்களை ஆசிரியைகள் தான் வெளியில்தூக்கிக் கொண்டு வந்ததாகவும், பின் பக்க சுவர் வழியாக கீழிறங்க உதவியதாகவும் கூறியுள்ளனர்.
இந் நிலையில், தங்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் இருக்கும் ஆசிரியைகள் சம்பவம்நடந்த சில நிமிடங்களில் தலைமறைவாகிவிட்டனர். பள்ளியின் பக்கம் அவர்களைக் காண முடியவில்லை.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந் நிலையில், அவர்களில் சிலஆசிரியைகள் இப்போது வாய் திறந்துள்ளனர்.
பொதுமக்களுக்குப் பயந்து வீடுகளில் அடைந்து கிடப்பதாகவும், 90 குழந்தைகள் பலியானது தங்களையும் மிகபயங்கரமாக பாதித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து கும்பகோணம் நடு தாபிர் தெருவில் வசிக்கும் ஆசிரியை கீதா என்பவர் கூறுகையில், 90குழந்தைகளை நாங்கள் கொன்று விட்டோம், தப்பி ஓடி வந்து விட்டோம் என்று பொதுமக்கள் கூறுவது எங்களைவேதனைப்படுத்தி விட்டது.
தீ விபத்து ஏற்பட்டவுடனேயே பள்ளியின் முதல் இரு தளங்களிலும் இருந்த 700க்கும் மேற்பட்ட மாணவிகளைவெளியேற்றுவதில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டோம். குறுகிய நுழைவாயில் வழியாக அவர்களை வெளியில்கொண்டு வந்து, சாலையை கடக்கச் செய்து தப்புவிக்க நாங்கள் உதவினோம்.
ஆனால் எங்களது தீவிர முயற்சியையும் மீறி 3வது மாடியில் தீ பரவி விட்டது. தீயைத் தாண்டி எங்களால் போகமுடியவில்லை. அந்த முயற்சியில் நான் மயக்கமடைந்தேன். சங்கரி என்ற இன்னொரு ஆசிரியையும்மயக்கமடைந்தார், அவருக்கு நெஞ்சு வலியும் ஏற்பட்டு விட்டது.
இதேபோல, கவிதா என்ற ஆசிரியை நான்கு மாத கர்ப்பமாக இருந்தார், அவருக்கு இந்தச் சம்பவத்தால் கருகலைந்துவிட்டது என்கிறார் கீதா கண்ணீருடன்.
சங்கரியும், கவிதாவும் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கரி கூறுகையில், ஒவ்வொரு குழந்தையையும் பத்திரமாக காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காகத்தான்ஆசிரியைகள் அனைவரும் முயன்றோம்.
750 குழந்தைகள் வரை காப்பாற்றி விட்டோம். ஆனால் அதையும் மீறி 90 குழந்தைகள் பலியாகி விட்டது எங்களைமனரீதியாக மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டது என்றார்.
கீதா தொடர்ந்து கூறுகையில், தீ பரவத் தொடங்கியதும் பள்ளியின் மின்சார இணைப்பை துண்டித்தோம். பள்ளிக்குவெளியே தெருவில் லாரிகள் வேகமாக சென்று கொண்டிருந்ததால், குழந்தைகள் பத்திரமாக சாலையைக் கடக்கமுயற்சி செய்தோம்.
இத்தனை செய்தும், 750 குழந்தைகளுக்கும் மேலாக காப்பாற்றியும் எங்களை வில்லன்கள் போல பொதுமக்கள்பார்ப்பது வேதனையைத் தருகிறது.
இந்த கோர விபத்திற்கு எங்களை குறை சொல்வது சரியாக இருக்காது. மாறாக, குறுகிய நுழைவாசல்,நெருக்கடியான கட்டடங்கள் என பள்ளியை வைத்திருந்த பள்ளி நிர்வாகத்தின் மீது தான் குற்றம் சாட்ட வேண்டும்.
நாங்கள் யாரும் தப்பி ஓடவில்லை. போலீஸார்தான் எங்களை மறைவிடத்தில் இருக்குமாறும், இல்லாவிட்டால்பொது மக்கள் அடித்துக் கொன்று விடுவார்கள் என்றும் அறிவுறுத்தினர். இதனால்தான் நாங்கள் வீடுகளை விட்டுவராமல் இருந்து வருகிறோம்.
இதில், மரியம் ஏஞ்சலின் என்ற ஆசிரியையிடம் மட்டும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.ஆசிரியைகளை கும்பகோணத்தில் இருக்க வேண்டாம் என்று கூறியதால் இரு ஆசிரியையகள் தஞ்சாவூர் சென்றுவிட்டனர் என்றார் கீதா.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications