சட்டசபையை புறக்கணிக்க ஜ.மு.கூட்டணி முடிவு
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரை 10 நாட்களுக்கு மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்துகூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிப்பதென திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
சட்டசபை செயலாளர் ராஜாராமன் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு திமுகதலைவர் கருணாநிதி, திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் ஜனநாயக முற்போக்குக்கூட்டணியின் தலைவர்களுடன் அவர் ஆலோசித்தார்.
பின்னர் திமுக பொதுச் செயலாளரும், சட்டசபை திமுக தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களிடம்பேசுகையில், பட்ஜெட் கூட்டத் தொடரை மிகவும் குறுகிய காலத்தில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதை நாங்கள்வன்மையாகக் கண்டிக்கிறோம். குறைந்தது 30 நாட்களுக்காவது சபை நடத்தப்பட வேண்டும் என்றுவலியுறுத்தினோம், ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை.
எனவே திமுக உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சபைத் தொடரைபுறக்கணிப்பதென ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் இன்று ஒருநாள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்போம் என்றார் அன்பழகன்.
காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறுகையில், வெறும் 8 நாட்கள் மட்டுமே சபையைக்கூட்டியுள்ளனர். இது மிகவும் அநியாயமானது. இதைக் கண்டித்து கோட்டை முன் 23ம் தேதி உண்ணாவிரதம்இருக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணி எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர் என்றார் அவர்.
அவசரம் அவசரமாக சட்டசபைக் கூட்டத்தை முடிப்பதன் மூலம் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளது தமிழகஅரசு என பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications