அதிகாரிகளின் தமிழர் விரோதம்: நெடுமாறன் தாக்கு
பெங்களூர்:
மத்தியில் எந்த ஆட்சி நடந்தாலும் அதிகாரிகள் தமிழர்களுக்கு விரோதமாகவே நடந்துகொள்கிறார்கள் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டினார்.
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் இன்று நடந்த உலகத் தமிழர் பேரவையின் இரண்டாமாண்டு விழாவில்பேசிய நெடுமாறன்,
இலங்கையில் தமிழர்களை ஒடுக்க, இந்திய ராணுவத்தை மீண்டும் அந் நாட்டுக்குக் கொண்டு செல்லமுயற்சிகள் நடக்கின்றன. அதற்காகவே இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளஇலங்கை ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்காக இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் டெல்லிக்கு படையெடுத்த வண்ணம்உள்ளனர்.
அது போன்ற ஒப்பந்தம் ஏற்படுவது தமிழர்களின் நலனுக்கு பெரும் கேட்டை விளைவிக்கும். தனக்குஅன்னிய எதிரிகள் யாரும் இல்லாத நிலையில், அப்படிப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்ததிற்கு இலங்கைஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?
இந்த ஒப்பந்தத் திட்டமே இலங்கையில் வாழும் தமிழர்களை ஒழித்தழிக்கும் சதி தான். இனப்பிரச்சனையில் இந்தியாவை இலங்கை பலமுறை முதுகில் குத்தியுள்ளதை மறக்கக் கூடாது.
டெல்லியில் இருப்பவர்கள் இலங்கையின் இந்த சதி வலையில் விழுந்துவிடக் கூடாது. மீண்டும்இலங்கையில் வலையில் நீங்கள் வீழ்ந்தால், மீண்டும் அவர்களால் நீங்கள்ஏமாற்றப்படுவீர்கள்.
இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிகா, சிங்கப்பூர், கனடா ஆகிய தமிழர்கள் அதிகம் வசிக்கும்நாடுகளில் தமிழ் பேசும் தூதர்களை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.
இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை தமிழ் எம்.பி. ஈழவேந்தனை சென்னை விமானநிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். எந்த ஆட்சி வந்தாலும் போனாலும்அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொள்வதே இல்லை.
அவர்கள் எப்போதுமே தமிழர்களுக்கு விரோதமாகவே செயல்படுகிறார்கள். இதற்கு இன்னொருஉதாரணம் தான் ஈழவேந்தன் திருப்பி அனுப்பப்பட்டது. இது தமிழர்களுக்கு நேர்ந்துள்ளஅவமானம். இது போன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் மிக அபாயகரமான விளைவுகள் ஏற்படும்என்று எச்சரிக்கிறேன்.
அதிகாரிகளின் இந்தச் செயலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் ஆகியோர் விளக்கம் அளித்தாக வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க முயல்வதாக மதிமுக தலைவர் வைகோவும்உறுதியளித்திருக்கிறார் என்றார் நெடுமாறன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications