தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கடும் கண்டனம்
டெல்லி:
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று முதல்வர்ஜெயலலிதாவுக்கு பதில் தந்த துணை தேர்தல் கமிஷ்னருக்கு அதிமுக கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் கமிஷனிடம் அதிமுகவின் சார்பில் அக் கட்சியின் சட்டஆலோசகரும் ராஜ்யசபா எம்.பியுமான ஜோதி தந்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததால் தான் மக்களவைத் தேர்தலில் அதிமுகதோற்றது. இதை எங்கள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா சுட்டிக் காட்டியதை, லேசாக எடுத்துக்கொண்டு பதில் தந்திருக்கிறார் துணை தேர்தல் கமிஷ்னர் ஜா.
இது ஆச்சரியம் தருகிறது. இது தொடர்பாக எங்கள் தலைவியிடம் கருத்துக் கூட கேட்கவில்லைதேர்தல் கமிஷன். முதல்வரின் குற்றச்சாட்டுக்கு ஒரு இடை நிலை அதிகாரியான துணை தேர்தல்ஆணையர் பத்திரிக்கைகள் மூலம் பதில் தந்திருக்கிறார்.
அவருக்கு என்ன அவ்வளவு அவசரம்? இது குறித்து தேர்தல் கமிஷன் தெளிவாக விசாரிக்கவேண்டும். எங்கள் கருத்தைக் கேட்க நாள் ஒதுக்க வேண்டும். மக்களவைத் தேர்தலின்போதுமின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் எப்படி முறைகேடு நடந்தது என்பது குறித்து விளக்கஎங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.
தேர்தலுக்கு முன்பும், தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பின்பும் வாக்குப் பதிவு எந்திரங்களில்முறைகேடு நடந்துள்ளது என்பது அதிமுகவின் அசைக்க முடியாத கருத்தாகும் என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications