மதுரை கிளைக்கு ரிட் அதிகாரம்: சுபாஷன் ரெட்டி
மதுரை - சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், இந்த கிளைக்கு உட்பட்ட மாவட்டங்கள் தொடர்பான ரிட் மனுக்கள்அனைத்தும் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று முறைப்படி விசாரணைகள் தொடங்கின. முதல் வழக்கை தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி, நீதிபதி கனகராஜ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த ஜெயபாலன் என்பவர் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையைக் குறைக்கக் கோரி மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்தநீதிபதிகள் அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தனர்.
இதேபோல, நீதிபதிகள் கற்பகவிநாயகம், முருகேசன், சொக்கலிங்கம், இப்ராகிம் கலிபுல்லா ஆகிய நீதிபதிகள் மற்றவழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
இன்று செய்தியாளர்களிடம் நீதிபதி சுபாஷன் ரெட்டி பேசுகையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின்வரம்புக்குட்பட்ட மாவட்டங்கள் தொடர்பான ரிட் மனுக்கள் அனைத்தும் மதுரை கிளையில் விசாரிக்கப்படும்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு நீதிபதிகளாக கற்பகவிநாயகம், கனகராஜ், இப்ராகிம் கலிபுல்லா, முருகேசன்,சொக்கலிங்கம் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-சென்னை வழக்கறிஞர்கள் போர்க்கொடி:
இந் நிலையில், தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை இடம் மாற்றம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் நாளை முதல் காலைவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் குதிக்கிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையை திறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்கோரிக்கை விடுத்து பல வகையான போராட்டங்களில் இறங்கினர். அவர்களுக்கு எதிராக மதுரை, திருச்சிஉள்ளிட்ட தென் மாவட்ட வழக்கறிஞர்களும் எதிர் போராட்டத்தில் இறங்கினர்.
சென்னை வழக்கறிஞர்களின் கோரிக்கை மற்றும் அவர்கள் போட்ட வழக்குகளை கடந்து மதுரையில்உயர்நீதிமன்ற கிளை சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அன்றே முதல் வழக்கு விசாரணையும் நடந்தது.தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியும், நீதிபதி தினகரும் இணைந்து முதல் வழக்கை விசாரித்தனர். அது ஒரு ரிட்மனு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்திற்குப் பின்னர் சங்கத் தலைவர் பிரபாகரன் பிரபாகரன்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்திற்குக் கொடுத்த உறுதிமொழியை மீறிவிட்டார். மதுரை கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்படாது என்று எங்களிடம்தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மதுரை கிளையின் முதல் வழக்கே ரிட் மனு என்பது எங்களை அவமானப்படுத்தும் செயலாகும். எனவேசுபாஷன் ரெட்டியை உடனடியாக தலைமை நீதிபதி பதவியிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்கள் சென்னை உயர்நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் தொடர்ந்துதொடர வேண்டும்.
9 நீதிபதிகள் குழுவின் அறிக்கை இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளைவலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் மிகத் தீவிரமாகஈடுபடவுள்ளோம் என்றார் பிரபாகரன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications