இராக்: 3 இந்தியர்கள் தலைக்கு கெடு நீட்டிப்பு
துபாய்:
3 இந்தியர்கள், 3 கென்ய நாட்டினர், ஒரு எகிப்து நாட்டவரை பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ள இராக்கிய தீவிரவாதிகள், தங்களுடன் சமரச பேச்சு நடத்த பழங்குடி இன பிரமுகர்ஒருவரை நியமித்துள்ளனர்.
அவர் மூலமாக இந்திய, எகிப்து, கென்ய அரசுகள் தங்களுடன் பேச்சு நடத்தி வருவதால், பிணைக்கைதிகளை இப்போதைக்குக் கொல்ல மாட்டோம் என்று அறிவித்து, கெடுவை நீட்டித்துள்ளனர்.
பிளாக் பேனர்ஸ் என்ற அந்தத் தீவிரவாத அமைப்புடன் இராக்கில் உள்ள இந்தியத் தூதரக ஊழியர்ஒருவரும் ரகசிய பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியர்களை விடுவிக்க அவர்கள்பணம் கேட்பதாகவும், அந்த பேரம் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிகிறது.
இந் நிலையில் இந்த 7 பேரையும் வேலைக்காக இராக்குக்கு அனுப்பிய குவைத் நிறுவனமும், இந்தியா,கென்யா, எகிப்து ஆகிய நாட்டு அரசுகளும் தங்களுடன் பேச்சு நடத்த வசதியாக ஷேக் ஹிசம்அல்-துலாய்மி என்ற பழங்குடி இனப் பிரமுகரை நியமித்துள்ளதாக, அல் அரேபியத் தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அறிக்கை அனுப்பிய தீவிரவாதிகள், பிணைக்கைதிகளின் நாடுகளுடன் துயால்மி மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் கைதிகளைக்கொல்லவில்லை. அதற்கான கெடுவை நீட்டித்துள்ளோம்.
அதே நேரத்தில் எங்களுக்கு எதிராக பொறுப்பில்லாமல் பேசுவதை இந்தியா நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்கப் படைகளுக்கு உணவு சப்ளை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள குவைத் நிறுவனம்உடனடியாக இராக்கில் இருந்து வெளியேறாவிட்டால், மூன்று நாளுக்கு ஒருவர் என்ற வீதத்தில்இந்த பேரையும் தலையை வெட்டிக் கொல்வோம் என தீவிரவாதிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
தீவிரவாதிகளால் சமரசத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ள துலாய்மி, பாக்தாதின் மேற்கே உள்ளஅல்-அன்பர் மாகாணத்தைச் சேர்ந்த முக்கிய பழங்குடிப் பிரமுகராவார். சமீபத்தில் பிலிப்பைன்ஸ்நாட்டைச் சேர்ந்தவரை தீவிராதிகளிடம் இருந்து மீட்பதில், இவர் தான் முக்கியப் பங்கு வகித்ததாகக்கூறப்படுகிறது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications