வழக்கறிஞர் பதவிகள்: திமுகவுக்கு காங். கண்டனம்
சென்னை:
மத்திய அரசு வழக்கறிஞர்களாக திமுகவினரை மட்டுமே நியமித்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தமிழக நீதிமன்றங்களில் மத்திய அரசுக்கான வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மத்திய சட்டத் துறையால்நியமிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் பதவிகளைப் பிடிக்க காங்கிரசார், மத்திய சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜை தொடர்பு கொண்டபோது, இது தமிழகவிவகாரம் என்பதால், திமுக தலைவரின் அனுமதியைப் பெற்றுவிட்டு வருமாறு கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.
தங்களது கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதே திமுகவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க முடியும் என சட்ட அமைச்சர்கூறிவிட்டதையடுத்து சென்னை திரும்பிய அவர்கள், திமுக தலைவர் கருணாநிதியை அவர்கள் சந்தித்தாகவும், ஆனால் அவர்உறுதிமொழி ஏதும் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதி மூலமாக தனது கட்சி வழக்கறிஞர்களை அந்தப் பதவிகளுக்குநியமித்துவிட்டது திமுக.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்துறைஅமைச்சர் பரத்வாஜுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்களின் கெளரவத்தைக் காப்பாற்றுங்கள். தமிழகத்தில் காலியாகவுள்ள மத்தியவழக்கறிஞர்கள் பணியிடங்களில் காங்கிரஸ் கட்சியினரையும் நியமிக்க வகை செய்யுங்கள்.
சமீபத்திய பட்டியல் முழுவதிலும் திமுக வழக்கறிஞர்களேஇடம் பெற்றிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், அதிருப்தியையும்ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications