இந்து வழக்கு: அரசியல் சட்ட பெஞ்ச் விசாரிக்கும்
டெல்லி:
இந்து, முரசொலி பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள், 4 நிருபர்களைக் கைது செய்ய தமிழக சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்துபிறப்பித்த வாரண்ட் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்து, முரசொலி பத்திரிக்கைகள் சட்டமன்ற உரிமையை மீறிவிட்டதாகக் கூறி அதன் ஆசிரியர்கள்,நிருபர்கள் உள்பட 6 பேரை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்துபத்திரிக்கையாளர்களின் வீடுகளில் இரவு நேரத்தில் குண்டர்களைப் போல நுழைந்த போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர்.
பெங்களூரில் நள்ளிரவில் இந்து ஆசிரியர் ராமின் காரை வழிமறித்து கலாட்டா செய்தது தமிழக போலீஸ். இதற்கு தேசிய அளவில்இதற்குக் கடும் கண்டனம் எழுந்தது. இந்து அலுவலகத்தில் வாரண்ட் இல்லாமல் நுழைந்த போலீசாரை ஊழியர்கள்விரட்டிவிட்டனர்.
இந்தக் கைது உத்தரவை எதிர்த்தும், தங்கள் மீது உரிமைப் பிரச்சனை கிளப்ப சட்டமன்றக்குக்கு அதிகாரம் உண்டா என்று கேள்விஎழுப்பியும் இந்து ஆசிரியர் ராம், முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதையடுத்து கைது நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந் நிலையில், இந்த மனுக்கள் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது கைது செய்யவிதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி லஹோட்டி, இந்த இரு மனுக்களும்சட்டமன்றத்தின் அதிகாரம் குறித்த அரசியல் சட்ட கேள்விகளை எழுப்பியுள்ளதால், இவற்றை அரசியல் சட்ட பெஞ்ச் விசாரிக்கஉத்தரவிட்டார்.
அரசியல் சட்டத்தின் 19வது பிரிவு அளித்திருக்கும் கருத்து சுந்திரத்தை சட்டமன்றத்தின் 194(3) வது பிரிவு பறிப்பதாக இந்து ராம்தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications