இஸ்லாமில் மாற்றம் கோரி டாகுமெண்டரி படம்
கொல்கத்தா:
இஸ்லாமிய மதத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும், புனித குரானின் தத்துவங்களில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு டாக்மெண்டரி படத்தைத் தயாரித்துள்ளார் வங்கதேசத்தைச் சேர்ந்த சகிரியாகபீர் என்ற இயக்குனர்.
இஸ்லாமியரான இவர், தீவிர மதவாதமான வகாபியிஸத்தில் இருந்து இஸ்லாம் விலகி, ஜதிதிஸம் என்றமென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்கிறார். ஜதி என்றால் அரேபிய மொழியில் மாற்றங்கள்என்று பொருள்.
இவரது கருத்துக்கு வங்கதேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவருக்கு எதிராக அல்-கொய்தா, வங்க தேசஅமைப்பான முஜாகித்-அல்-இஸ்லாம் ஆகிய தீவிரவாத அமைப்புகள் பத்வா அறிவித்துள்ளன.
மனித உரிமைகள் ஆர்வலரான சகிரியா, ஜதியிஸத்தை அடிப்படையாகக் கொண்ட அமைதி தவழும் நாடானததார்ஸ்தான குறித்து ஒரு டாகுமெண்டரி படத்தை எடுத்துள்ளார்.
உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தானுக்கு அருகில் இருக்கும் குட்டி நாடு தான் ததார்ஸ்தான். சோவியத் யூனியனில்இருந்து பிரிந்து வந்த நாடுகளில் இதுவும் ஒன்று.
முன்பு மதக் கலவரங்களுக்குப் பெயர் போன இந்த நாட்டில் இப்போது முழு அமைதி நிலவுகிறது.இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் சரிசமமாக வாழும் இந்த பூமியில் இரு தரப்பினரையும் அமைதியாக வாழவைத்துக் கொண்டிருப்பது ஜதிதிஸத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் தான் என்கிறார் சகிரியா.
இந்த நாட்டை அடிப்படையாக வைத்து ததார்ஸ்தான்: ஒரு அமைதி பூமி என்ற பெயரில் தனது டாகுமெண்டரியைஉருவாக்கியுள்ளார்.
இந்த 25 நிமிட படத்தை இன்று கொல்கத்தாவில் திரையிட்டார் சகிரியா.
ரஷ்யாவை ஆக்கிரமித்த இவான் மன்னன், ததார்ஸ்தானில் இருந்த ஒரு மசூதியை இடித்துவிட்டு அங்குதேவலாயத்தை எழுப்பினான். இப்போது இந்த தேவாலயத்தை ஒட்டி இஸ்லாமியர்கள் புத்தம் புதிய மசூதியைஎழுப்பியுள்ளனர். இதற்கு கிருஸ்தவர்களும் பேருதவி புரிந்திருக்கிறார்கள்.
இந்த சம்பவங்களை கதையாகக் கொண்டு, இஸ்லாமிய தத்துவங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றவிஷயத்தை கருவாகக் கொண்டு தனது டாகுமெண்டரியை இயக்கியுள்ளார் சகிரியா.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், வகாபியிஸம் என்ற தீவிர இஸ்லாமை அடிப்படையாகக் கொண்டுள்ளஇஸ்லாமிய நாடுகள் அதிலிருந்து விலகி ஜதியிஸத்துக்கு வர வேண்டும். இதன்மூலம் தீவிர மத உணர்வுகளைமுனை மழுங்கச் செய்ய முடியும்.
ததார்ஸ்தானை மற்ற நாடுகளும் பின்பற்றினால் மதக் கலவரங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே சாவு மணிஅடித்துவிட முடியும்.
மத மோதல்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இந்தியாவில், ஒரு தேவாலயமும் ஒரு மசூதியும் அருகருகேஇணைந்திருக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்லும் ததார்ஸ்தான் நாட்டைப் பற்றிய டாகுமெண்டரிப் படத்தைதிரையிடுவது மிகவும் பொறுத்தமானதாகக் கருதுகிறேன் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications