இராக்: இன்றிரவு இந்தியரை கொல்வதாக மிரட்டல்
பாக்தாத்:
தங்களிடம் பணயக் கைதியாக இருக்கும் மூன்று இந்தியர்களில் ஒருவரை இன்றிரவு 8.30 மணிக்குதலையை வெட்டிக் கொல்லப் போவதாக இராக்கிய தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து சுக்தேவ், அந்தர்யாமி, திலக்ராஜ் ஆகிய மூன்று இந்தியர்களையும் விடுவித்துவிடுமாறும், அவர்கள் அமெரிக்காவுக்கு உதவ இராக்குக்கு வரவில்லை என்றும் இந்திய அரசுமீண்டும் தீவிரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இராக்குக்குப் படைகளை அனுப்ப மாட்டோம் என உறுதிமொழி அளிக்க பாகிஸ்தான் அரசுதவறியதால், அந் நாட்டைச் சேர்ந்த இரு பிணைக் கைதிகளையும் இராக்கிய தீவிரவாதிகள் தலையைவெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இந் நிலையில், இந்தியர்களையும் கொலை செய்யப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.இவர்கள் மூவரும் அமெரிக்கர்களுக்கு உணவு சப்ளை செய்து வந்த குவைத் நிறுவனத்தில்பணியாற்றி வந்தனர்.
இவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்த தீவிரவாதிகள், இராக்கை விட்டு குவைத் நிறுவனம்வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். ஆனால், அதை குவைத் நிறுவனம்ஏற்கவில்லை.
இது குறித்து தங்களுடன் பேச்சு நடத்த இராக்கிய பழங்குடி இனப் பிரமுகரான துலாய்மியைதீவிரவாதிகள் நியமித்தனர். ஆனால், அவரிடமும் குவைத் நிறுவனம் பேசவில்லை.
இதையடுத்து ஒரு இந்தியரை தலையை வெட்டிக் கொலை செய்யப் போவதாக தீவிரவாதிகள்அறிவித்துள்ளனர். அல்-அரேபியா தொலைக்காட்சிக்கு அவர்கள் அனுப்பிய செய்தியில்,
மகாத்மா காந்தியின் உன்னதமான அமைதிப் பாதையில் இருந்து இந்திய அரசு விலகிச் சென்றுவருகிறது. எங்களிடம் பிடியில் இருக்கும் இந்தியர்கள், அமெரிக்கப் படையினருக்கு உதவியாகபணியாற்றி வந்தனர்.
அவர்கள் பணியாற்றி வந்த குவைத் நிறுவனம், எங்கள் சமாதானத் தூதருடன் பேச்சு நடத்தமறுத்துள்ளது. அதே போல தூதரகங்களுடன் அவருடன் பேச முன் வரவில்லை. இதனால்இந்தியர்களில் ஒருவரை இன்று கொல்வோம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து இந்தியர்கள் மீது கருணை காட்டி விடுவித்து விடுமாறு இராக்கில் உள்ள இந்தியத் தூதர்பிரிஜ் மோகன் தியாகி தீவிரவாதிகளுக்கு மீணடும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே போல சமாதானப் பேச்சு நடத்த அறிவிக்கப்பட்டுள்ள தூதரான துலாய்மியும், பணயக்கைதிகளைக் கொல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இறைவனின் பெயராலும், என்பெயராலும், மனிதாபமானத்தின் பெயராலும் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன் என்று கூறியுள்ளஅவர், விரைவில் தீவிரவாதிகளின் கோரிக்கைகைள் நிறைவேற வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே குவைத் நிறுவனமான கல்ப் லிங்கும் துலாய்மியுடன் பேச்சு நடத்த முன் வந்துள்ளது.
இன்றிரவு 8.30 மணிக்கு ஒரு இந்தியரை தலையை வெட்டிக் கொல்லப் போவதாக தீவிரவாதிகள்எச்சரித்துள்ளதால், பிணைக் கைதிகளாக உள்ள மூவரின் வீடுகளிலும் மரண பயமும் பெரும்கலக்கமும் நிலவி வருகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications