இந்துத்துவா: அத்வானி மீது கருணாநிதி தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்துத்துவாவுக்கு ஒவ்வொரு நேரத்திலும் ஒரு அர்த்தம் சொல்லி வருகிறார் அத்வானி என திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கோவாவில் நடந்த பாஜகவின் தேசியக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு இந்துத்துவா அவசியம்என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் பேசியிருக்கிறார்கள்,வலியுறுத்தியுள்ளார்கள்.

பாஜகவைப் பொறுத்தவரை இந்த முடிவு புதிதல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக, மதிமுக,பா.ம.க. ஆகியவை இருந்தபோது இந்துத்துவா குறித்து வாயே திறக்காமல் இருந்தார்கள்.

அப்போது வெளியிடப்பட்ட செயல் திட்டத்தில் சிறுபான்மையினருக்கு நம்பிக்கை வாக்குறுதிகள்,உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. காலப் போக்கில் காவியின் நிழல் கூட்டணியில் படரஆரம்பித்தது.

இது புரிய ஆரம்பித்தவுடன் திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை விட்டு விலகின. அன்றுஜாடையாக நாங்கள் உணர்ந்து கொண்டதை கோவா மாநாட்டில் பாஜக தலைவர்கள்வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.

அடக்கி வைக்கப்பட்டு, தங்களையும் மீறி, தொண்டையைக் கிழித்துக்கொண்டு வந்த குரல் அது.இந்துத்துவா என்ற சொல்லுக்கு சில நேரம் விரோதமாகவும், சில நேரம் விசுவாசமாகவும்வியாக்கியானம் செய்வது அத்வானி போன்ற தலைவர்கள் கற்ற வித்தை.

மக்களை ஏமாற்ற தேர்தல் நேரத்தில் இந்தியா என்பதே இந்தியர்கள் நாடு, மத கண்ணோட்டம்கூடாது என்று பாஜகவினர் சொல்வது பசப்பு வாதம் என்பதை உணர்ந்ததால் தான் அங்கிருந்துவெளியேறினோம். திராவிட இயக்க கொள்கைகளைக் காக்க எடுக்கப்பட்ட முடிவு அது.

பிரிந்து கிடக்கும் திராவிட இயக்கங்கள், இணைந்து இடதுசாரிகளைப் போல ஒரே பேரியக்கமாகஒன்றுபட்டு இயங்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல் நாம் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதற்காக சிலர் தாறுமாறாகசெய்திகள் வெளியிடுகின்றனர். இந்தப் பொதுக் குழுவில் (மதிமுக பொதுக் குழுவில்) நம்மைப்பற்றி அப்படி பேசினர், இப்படிப் பேசினர் என்று கற்பனை செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இன நலன் குறித்து கவலைப்படுவோர் இந்த இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை புறக்கணிப்பதுநல்லது எனற கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+