கூரைகளை நீக்க பள்ளிகளுக்கு நீதிமன்றம் கெடு
சென்னை:
பள்ளிகளில் உள்ள கூரைகளை இம் மாத இறுதிக்குள் நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தையடுத்து, ஜூலை 31-ம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் கூரைகொட்டகைகள் இருக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளின் சங்கத் தலைவர் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதை காரணமாகவே கும்பகோணத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அரசு உதவி பெறும்பள்ளிகளில் மட்டுமே மதிய உணவு தயார் செய்யப்படுகிறது.
ஆங்கிலப் பள்ளிகளை பாதுகாப்பாகவே நடத்துகிறோம். இவற்றில் 10 சதவீதம்தான் கூரை கொட்ட கைகள்உள்ளன. அரசு அறிவித்துள்ளப்படி ஜூலை 31-ம் தேதிக்குள் கூரைகளை அகற்ற கால அவகாசம் போதாது. எனவேகால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியம் மேலும் 1 மாத கால அவகாசம் அளித்து உத்தரவு விட்டார்.ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கூரைகள் அகற்றப்படாவிட்டால் அந்தப் பள்ளிகள் மீது அரசு ச்டடப்பூர்வ நடவடிக்கைமேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications