2 மாதத்தில் சட்டசபை தேர்தல் வரும்: ராமதாஸ்
திண்டிவனம்:
356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைக்க திமுக தலைவர் கருணாநிதி ஒத்துக்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பா.ம.கவுக்கு வெற்றி தேடித் தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துதிண்டிவனத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
தமிழக சட்டமன்றத்துக்கு இன்னும் 2 மாதத்தில் தேர்தல் வரும். அந்த நாளை எதிர்பார்த்து தமிழகமக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
தன்னை ஆட்சியில் உட்கார வைத்த எங்களைப் பார்த்து தூசி, துரும்பு, சாதி வெறியன் என்றுஏதேதோ பேசினார் ஜெயலலிதா. அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவே இருக்காது.தொடர்ந்து தோல்விகளைத் தாங்கும் பக்குவம் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் இல்லை.
அதிகாரியை மதிக்காமல் ஆட்சி நடத்துவதால், நிர்வாகம் துவண்டு போய் கிடக்கிறது. தவறானஒருவரை முதல்வராகத் தேர்வு செய்த மக்கள் அவருக்கு மக்களவைத் தேர்தலில் தண்டனைதந்தார்கள்.
40ல் ஒன்று கூட ஜெயலலிதாவுக்குக் கிடைக்கவில்லை. சட்டசபைத் தேர்தலில் 234லிலும் அதிமுகடெபாசிட் இழக்கும். இதனால் இப்போதே பலர் அதிமுகவிலிருந்து விலகி எங்கள் கட்சியில் சேரஆரம்பித்துவிட்டார்கள். தேர்தலுக்குப் பின் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
மக்கள் நம்மை கண்காணிக்கிறார்கள். இதனால் பா.ம.க. எம்.பிக்கள் மக்கள் குறைகளைக் கேட்டு,அதைத் தீர்க்க வேண்டும். எம்.பிக்களிடம் குறை இருந்தால் மக்கள் என்னிடம் சொல்லலாம்.அவர்களை நான் சரி செய்வேன்.
தமிழ்நாட்டுக்கு இது பொற்காலாம். 12 அமைச்சர்கள் மத்தியில். மாநிலத்துக்கு பல நன்மைகளைச்செய்ய முடியும். நாம் நல்லது செய்ய தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். ஆனால், நிச்சயம்ஒத்துழைக்க மாட்டார்கள். இதனால் தான் 356யை வைத்து ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்கலாம்என்கிறேன் என்கிறேன். ஆனால், கலைஞர் (திமுக தலைவர் கருணாநிதி) கேட்ட மாட்டேன் என்கிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு, அரசு, நிர்வாகம், விதி, அரசியல் மரபு, நாகரீகம் இதுஎதுவுமே இல்லை. அப்புறம் எதற்கு இந்த ஆட்சி? ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் ஒவ்வொருகணமும் தமிழகத்துக்குக் கேடுதான்.
அதனால் தான் சொல்கிறேன் கலைஞர் அவர்களே, 356 வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.ராஜ்யசபாவில் நமது கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லையே, ஆட்சிக் கலைப்பை நடத்த முடியாதுஎன்று நினைக்காதீர்கள். பா.ஜகவினரால் ஏதும்செய்ய முடியாது.
இனி பாஜக போணியாகாது. இந்துத்துவா வெறியர்கள், பா.ஜ.கவை விட்டுவிட்டு தனிக் கட்சிதொடங்கப் போகிறார்கள். இதனால் எதைப் பற்றியும் யோசிக்காமல் 356க்கு சரி என்றுசொல்லுங்கள். இது கலைஞருக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications