தமிழக நிதி நிலை: ஆடிட்டர் ஜெனரல் கவலை
சென்னை:
தமிழக அரசின் நிதி நிலை குறித்து மத்திய கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம்கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் பற்றாக்குறை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதுகுறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள், துறைகளின் வரவு- செலவுகளைக் கண்காணிக்கும் ஆடிட்டர் ஜெனரல்அலுவலகத்தின் தமிழக பிரிவின் தலைமை ஆடிட்டர் தீதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் வருமானத்துக்கும் செலவீனங்களுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது கவலை தரும் நிலையில் உள்ளது.
2001-02ம் ஆண்டில் வரி வருமான இழப்பு ரூ.2,739 கோடியாக இருந்தது. இது 2002-03ம் ஆண்டில் ரூ.4,851கோடியாக அதிகரித்துள்ளது.
அதே போல 2001-02ல் ரூ.4,740 கோடியாக இருந்த அரசின் நிதிப் பற்றாக்குறை 2002-03ம் ஆண்டில் ரூ. 6,742கோடியாக அதிகரித்துள்ளது.
பொதுத் துறைகள், அரசுத் துறைகளில் அரசு செய்துள்ள முதலீடுகளுக்கு இணையான அளவில் அதன் மூலம்கிடைக்கும் வருவாயின் அளவு இல்லை. அதே நேரத்தில் தனது செலவுகளுக்காக அரசு பெரும் வட்டிக்கு பணத்தைகடன் வாங்கிய வண்ணம் உள்ளது.
கடன்களை திருப்பிச் செலுத்தவும் வட்டி கட்டவும் அதிக அளவில் அரசு பணம் செலவிட்டு வருகிறது. கடந்த 5ஆண்டுகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயின் வளர்ச்சி விகிதத்தைவிட கடனைத் திருப்பிச் செலுத்தும்விகிதம் அதிகமாக உள்ளது. நீண்ட நாள் கண்ணோட்டத்தில் மாநிலத்தின் நலனுக்கு இது நல்லதல்ல.
ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வபோது பணம் பெற்றுத் தான் தனது செலவுகளை தமிழக அரசு சமாளித்து வருகிறது.பட்ஜெட் குறைகளும், கட்டுக்கடங்காத செலவுகளும் தமிழக அரசின் நிதி நிலையை நெருக்கடிக்கு இட்டுச்சென்றுள்ளன.
2002-2003ம் ஆண்டில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட ரூ. 2,436.71கோடியை தமிழக அரசு கூடுதலாகசெலவிட்டுள்ளது. அதே போல 1991-2003ம் ஆண்டில் ரூ. 4,375.76 கோடியை கூடுதலாக செலவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்குச் சொந்தமான எண்ணூ
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications