நகை கொள்ளையடித்த சிபிஐ அதிகாரிகள்
சென்னை:
சென்னை தி.நகரில் சிபிஐ அதிகாரிகள் போல நடித்த இருவர் நகைக் கடையில் கொள்ளை அடித்துக் கொண்டுதப்பினர். அவர்களில் ஒருவனை பொது மக்கள் மறித்துப் பிடித்தனர். இன்னொருவன் தப்பிவிட்டான்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த நகை வியாபாரி சந்தோஷ் (22). இவர் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ளபிரபல நகை மாளிகைக்கு நகைகள் தயாரித்து கொடுத்து வருகிறார். பல லட்சம் மதிப்புள்ள 11 செட் நெக்லஸ்,162 ஜோடி காதணிகளுடன் சென்னை வந்த இவர், அதை கடைக்கு சப்ளை செய்ய சென்று கொண்டிருந்தார்.
தி.நகர் பகுதியில் அவரை இருவர் வழிமறித்தனர். நாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். நீங்கள் கடத்தல் தங்கம்வைத்திருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. உங்களை சோதனையிட வேண்டும் என்று கூறி சந்தோஷைஅவர்கள் இருவரும் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது சந்தோஷ் தன்னை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என தனதுஉறவினருக்கு செல்போனில் தகவல் சொல்லி கொண்டிருந்தபோது, அந்த இரு மர்ம நபர்களும் சந்தோஷ் கையில்வைத்திருந்த நகைப்பையை பறித்து ஒரு ஆட்டோவில் ஏறி தப்பிவிட்டனர். ஆட்டோவையும் அவர்கள் தயாராகவைத்துவிட்டு வந்ததாகத் தெரிகிறது.
இவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் அல்ல, கொள்ளையர்கள் என்பதைப் புரிந்து கொண்ட சந்தோஷ் உடனேவேறொரு ஆட்டோவில் ஏறி அவர்களைத் துரத்தி உள்ளார்.
சந்தோஷ் துரத்தி வருவதையறிந்த அவர்கள் இனி தப்ப முடியாது என்ற முடிவுக்கு வந்து நகைப் பையை, பக்கத்தில்மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவர் மீது வீசி உள்ளனர்.
சந்தோஷ் எழுப்பிய அபயக் குரலைக் கேட்ட அப் பகுதி மக்கள் கடத்தல் ஆசாமிகள் சென்ற ஆட்டோவை வழிமறித்தனர். அப்போது அதிலிருந்த ஒருவனும் ஆட்டோ டிரைவரும் தப்பியோடிவிட்டனர். இன்னொருவன் மட்டும்மக்களிடம் சிக்கிக் கொண்டான். அவனை பொது மக்களும் சந்தோஷும் திரு வி.க. காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர்.
பிடிபட்டவனின் பெயர் அயூப் என்பதும், அவன் மும்பையை சேர்ந்தவன் என்பதும் போலீஸ் விசாரணையில்தெரிய வந்துள்ளது. அவனிடம் போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications