பி.இ: சுய நிதி கல்லூரிகள் சேர்க்கை சிக்கல் நீடிப்பு
சென்னை:
பி.இ. மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய ரேங்க் பட்டியலிலும் திருப்பூர், ஈரோடு மாணவர்களேமீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் மேமாதம் வெளியிடப்பட்டன. ஆனால், அந்தக் கேள்வித் தாளில் 5 கேள்விகள் தவறாக இருந்ததால்அதற்கு அளிக்கப்பட்ட பதில்களுக்கான மதிப்பெண்கள் குறித்து குழப்பம் நிலவியது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவானது. இதையடுத்து 5 கேள்விகளையும் மறுமதிப்பீடு செய்து, அதற்கான மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி மீண்டும் விடைத் தாள்கள் திருத்தப்பட்டு, புதிய மதிப்பெண்கள் பட்டியலும்வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் நுழைவுத் தேர்வு எழுதியமாணவர்களின் ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பட்டியலின்படி திருப்பூர் மற்றும் ஈரோடு மாணவர்களே மாநில அளவில் முதலிடத்தைப்பிடித்துள்ளனர்.
கடந்த மே மாதம் வெளியான ரேங்க் பட்டியலின்படி திருப்பூரைச் சேர்ந்த மாணவி விக்னேஷ்300க்கு 298.16 கட்-ஆப் மார்க் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்தார். அவரே தான் புதியபட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஈரோடு மாணவர் நரேந்திரன் 297.48 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.கடந்த ரேங்க் பட்டியலிலும் இவர் இரண்டாம் இடத்தில் இருந்தார்.
சென்னை மாணவர் ராஜகணேஷ் 297.33 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.இவர்கள் மூவருமே பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசனில் சேரவே விருப்பம்தெரிவித்துள்ளனர்.
சுய நிதி கல்லூரிகள் சிக்கல் நீடிப்பு:
மகா குழப்பத்துக்குப் பின் ஒரு வழியாய் இறுதி ரேங்க் பட்டியல் வெளியாகிவிட்டாலும் கூட சுயநிதிக் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் மாணவர் சேர்க்கை குறித்த சிக்கல் இன்னும்நீடிக்கிறது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன், தமிழ்நாடு சுயநிதிப்பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பினர் நுழைவுத் தேர்வை நடத்தி முடிவுகளைவெளியிட்டுள்ளனர்.
இந்த முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்என்றார்.
தனியார் கல்லூரிகள் சார்பில் ஆஜரான கூட்டமைப்பின் தலைவர் ஜேப்பியார், தேர்வு முடிவுகளைவெளியிட்டுவிட்டாலும், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications