விவசாய கடன் வட்டி: ஜெ. அடுத்த சலுகை
சென்னை:
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை 9 சதவீதமாகக்குறைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு பயிர்க் கடன்களுக்கான வட்டி 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. நடப்புஆண்டில் இது 9 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. விவசாயிகளுக்கான கடன் ரூ.688 கோடியிலிருந்து ரூ.1,037கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
1999ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்க்கு முன்பு தங்களது குறுகிய காலப் பயிர்க் கடன்களை மத்திய காலக் கடன்களாகமாற்றிக் கொண்ட விவசாயிகள், மத்திய காலக் கடன்களின் தவணைகளைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.இவர்களுக்காக ஒரு புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
அதன்படி விவசாயிகளுக்கு இந்தத் தொகைக்கு முழு வட்டித் தள்ளுபடி அளிக்கப்படும். மேலும் 2 ஆண்டுகளுக்குஅசல் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. அதன் பின்னர் சம அளவிலான 5 ஆண்டுத்தவணைகளில் இதைத் திருப்பிச் செலுத்தினால் போதும். இதற்குத் தேவையான ரூ.68.95 கோடியை தமிழ்நாடுமாநிலக் கூட்டுறவு வங்கிக்கு தமிழக அரசு கடனாக அளிக்கும்.
கூட்டுறவு நூற்பு ஆலைகள் இயங்காத நிலையில் அவற்றுக்குக் கடன் வழங்கிய மாவட்ட கூட்டுறவு வங்கிகள்பாதிப்படைந்துள்ளன. இந்தக் கடன் சுமையை தமிழக அரசு ஏற்க முடிவு செய்துள்ளது. கடன்களைத் திருப்பிச்செலுத்த வசதியாக கூட்டுறவு நூற்பாலைகளுக்கு ரூ.76.57 கோடி கடன் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு வறட்சி காரணமாக விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் அபராதத் தொகை தள்ளுபடிசெய்யப்பட்டது. இதனால் கூட்டுறவு வங்கிகளுக்குத் தரப்பட வேண்டிய தொகையில் மீதமுள்ள ரூ.40 கோடியைரொக்கமாக தமிழக அரசு வழங்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications