தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கனமழை
சேலம்:
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் 3வது நாளாக கன மழை பெய்து வருகிறது.
கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்குப் பகுதி மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் முக்கியமான அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நீலகிரியில் கன மழையால் குளிரும் மிக அதிகமாகியுள்ளது. ஆங்காங்கு நிலச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.இதனால் அம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள்வெளியே செல்ல முடியாமல் ஹோட்டல் அறைகளில் அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் நல்ல மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில்தற்போது 75 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 5,960 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கேரளம், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், பிகார், உத்தராஞ்சல் மாநிலங்களிலும் பலத்தமழையும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் தடுப்பு அணை உடைந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் பரூச், சூரத்மாவட்டங்களில் பலத்த மழை, வெள்ளத்துக்கு 21 பேர் பலியாகிவிட்டனர். இம் மாவட்டத்தின் பெரும்பாலானபகுதிகள் வெள்ளித்தில் மூழ்கியுள்ளன.
உத்தராஞ்சலில் தெஹ்ரி அணைக் கட்டுப் பகுதியிலும் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு பலர்பலியாகியுள்ளனர்.
கர்நாடகத்தில் குடகு மாவட்டம், கேரளாவின் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்வதால்கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீரைத் திறந்து வேண்டிய கட்டாயத்தில் கர்நாடகம்உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து வெகுவாக அதிகரிக்கும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications