Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி- கொழும்பு கப்பலுக்கு ஜெ. எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது இந்தியாவின் உள்நாட்டுப்பாதுகாப்பைப் பாதிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்ததேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல்போக்குவரத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான பூர்வாங்கப் பணிகள் முடிவடைந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் பயணிகளுக்கான வசதிகளும்ஏற்படுத்தப்பட்டன. கப்பல் போக்குவரத்திற்கான அனுமதியையும் மத்திய அரசு வழங்கியது. இருப்பினும் கப்பல்போக்குவரத்து தொடங்குவதற்கான அறிகுறியைக் காணவில்லை.

இந் நிலையில் தூத்துக்குடியிலிருந்து கப்பல் போக்குவரத்தை நடத்துவதை விட அதை கேரள மாநிலம்கொச்சியிலிருந்து மேற்கொள்ளலாம் என அம்மாநில அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. தூத்துக்குடிக்குக்கிடைத்த வாய்ப்பை கொச்சிக்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் கேரள அரசு தீவிரமாக இறங்கியது.

இந்தப் பின்னணியில் தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை நடத்துவதற்குஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் ஒன்றைஅனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதை மத்திய அரசு ஒரு குறுகியகண்ணோட்டத்துடன் அணுகி வருகிறது. இதன் விபரீதமான பின் விளைவுகளை மத்திய அரசு கருத்தில்கொள்ளவில்லை.

இலங்கையின் அரசியல் விவகாரங்களில் தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பு முக்கிய பங்குவகிப்பதும், இந்தியாவின் பாதுகாப்பும், கப்பல் போக்குவரத்தைத் தொடங்கும் முன்பு கருத்தில் கொள்ள வேண்டியஅம்சங்களாகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு அமைதிப் பேச்சுவார்த்தையை பாதியில் முறித்து விட்டு, பயங்கரவாதநடவடிக்கைகளில் மீண்டும் இறங்கியதும், அத்தகைய நடவடிக்கைகளை இந்திய மண்ணில் நடத்தியதும் கடந்தகால வரலாறாகும். மேலும் விடுதலைப் புலிகளின் கப்பற்படையான கடற்புலிகள் இந்திய மீனவர்களை கடத்திச்செல்வதையும் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

நாட்டின் பாதுகாப்புக்கு இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும்போது, தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையேகப்பல் போக்குவரதத்து தொடங்குவது குறித்த யோசனையை கப்பல் போக்குவரத்துத் துறை முன்வைப்பதுஆச்சரியமாக இருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு குறித்த அம்சங்களையும் எல்லாம் ஒதுக்கி விட்டு, போதுமான பாதுகாப்பு வழங்கப்படும்என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியிருப்பது, ஒரு சிக்கலான விஷயத்தைஅவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே நிலவி வந்த அமைதி உடன்பாடு முறியும் நிலைதற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இப்போது கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினால், இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் விடுதலைப் புலிகள்ஊடுறுவும் வாய்ப்பு ஏற்படும். இது தமிழகத்தின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும்குந்தகத்தை ஏற்படுத்தும்.மேலும் இதன் மூலம் ஆயுதங்களும் போதை மருந்துகளும் தமிழகத்திற்குள் பரவும்வாய்ப்பு ஏற்படும்.

குறைந்த செலவிலான கப்பல் போக்குவரத்து, மருத்துவ வசதி தேடி வருபவர்களை விட, போதை மருந்துகடத்தல்காரர்களையே அதிகமாகக் கவரும். மேலும் இந்தப் போக்குவரத்துக்கு கடற்புலிகள் இடையூறாக இருக்கக்கூடும்.

இருநாடுகளுக்கு இடையிலான உறவு பலப்படும் என்பதை விட, இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு உள்ளஅச்சுறுத்தலையே முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் அமைதி ஏற்பட்ட பின்புதான்இத்தகைய கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும். அதுவரை இந்த விஷயத்தில் எந்த ஒரு சமரசமும்மேற்கொள்ளப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

8 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்:

இந் நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 2ம் தேதி 600 விசைப்படகுகள் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். இந்தப் படகுகளில்இரண்டு படகுகள் கரை திரும்பவில்லை.

ஒரு படகு கடலில் மூழ்கி விட்டதாகவும், இன்னொரு படகை இலங்கை மீனவர்கள் மூழ்கடித்து அதிலிருந்த 8தமிழக மீனவர்களையும் கடத்திச் சென்று விட்டதாக கரை திரும்பிய படகுகளின் மீனவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க வேண்டாம் என்று தமிழக மீன் வளத்துறை அதிகாரிகளும், கடலோரக்காவல்படையினரும் தமிழக மீனவர்களை எச்சரித்தும் தொடர்ந்து அவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்றுமீன் பிடிப்பதால்தான் இந்த நிலை ஏற்படுவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+