கற்பழிப்பு புகார்: திருச்சி கமிஷனரிடம் சேரன் மனு
திருச்சி:
திருச்சி பெண் நிஷா தன் மீது சுமத்திய கற்பழிப்புப் புகார் பொய்யானது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதால், இந்த பொய்யான புகாரைக் கொடுக்க நிஷாவைத் தூண்டியது யார் என விசாரிக்க வேண்டும் என்றுகோரி திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் இயக்குநர் சேரன் மனு கொடுத்துள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த நிஷா என்ற பெண், இயக்குநர் சேரனும், தங்கர்பச்சானும் தன்னைக் கற்பழித்து விட்டதாகபரபரப்புப் புகார் கொடுத்தார். இதனை சேரனும், தங்கர் பச்சானும் உடனடியாக மறுத்தனர். தங்களது பெயரைக்கெடுப்பதற்காக சிலரது தூண்டுதலின்பேரில் கொடுக்கப்பட்டுள்ள பொய்யான புகார் என ஆவேசமாகதெரிவித்தனர்.
இந் நிலையில், திருச்சி சென்ற சேரன், அங்கு மாநகர காவல்துறை ஆணையர் சுந்தரமூர்த்தியை சந்தித்து மனுஒன்றைக் கொடுத்தார். அதில், நிஷா என்ற பெண் என் மீது கூறிய புகார் பொய்யானது என்று போலீஸ்விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்தப் பெண் என் மீது கூறிய புகார் காரணமாக மனதளவில் நான் நிறைய பாதிக்கப்பட்டுள்ளேன். எனது பெயரும்கெட்டுள்ளது.
எனவே புகார் கொடுத்த பெண்ணின் மீதும், அந்தப் பொய்யான புகாரைக் கொடுக்க பின்னணியில் இருந்தவர்கள்யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்தப் புகார் மனு குறித்து விசாரணை நடத்துமாறு ஆணையர் சுந்தரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications