ம-து-ரை: அரசு மது கடையால் பள்ளியில் தீவிபத்து
மதுரை:
மதுரை செல்லூர், மீனாம்பாள்புரம் பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட குழந்தைகள்அதிர்ஷ்டவசமாக உ--யிர் தப்பியுள்ளனர். பள்ளிக்கு அருகே இருந்த மதுக் கடையிலிருந்து வந்த தீயால் இந்த விபத்து ஏற்பட்டது.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் புனித அந்தோணியார் நடுநலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு அருகே அரசு மதுக்கடையும், பாரும் உள்ளன. மதுக் கடையின் மேல் உள்ள பாரில், குடிமக்களுக்குத் தேவையான கோழிக்கறி, வறுவல் உள்ளிட்டவைசமைக்கப்படுவது வழக்கம்.
இந் -நிலையில் இந்த பா-ரிலிருந்து கிளம்பிய தீப்பொறி தீயாக மாறி பார் ழுவதையும் சேதப்படுத்தியது. அத்தோடு, அருகில் இருந்த பள்ளிக்கூடத்திற்கும் தீ பரவியது.
தீ பரவியதைப் பார்த்ததும், ஆசி-ரியர்கள், மாணவர்களை அங்கிருந்து கீழே கொண்டு வந்து விட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தபொதுமக்களும் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
சிறிது -நரத்தில் பள்ளியின் மேற்கூரை -முழுவதும் எ-ரிந்து சாம்பலானது. இதில் மாணவர்களின் பாடப் புத்தகங்கள், பள்ளிக்கூடஆவணங்கள் ஆகியவை எ-ரிந்து சாம்பலாயின.
பொதுமக்களும், ஆசி-ரியர்களும் சுதா-ரிப்பாக செயல்பட்டதால் வகுப்புகளில் இருந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினர்.
தீ விபத்தைத் தொடர்ந்து உடனடியாக மதுக் கடையை அங்கிருந்து அகற்றுமாறு கோரி பொதுமக்களும், பெண்களும் மறியல் போராட்டம்நடத்தினர்.
இந் -நிலையில் அரசு மதுக் கடை ஊழியர்கள் 5 பேர், பார் உ-ரிமையாளர் வெங்கடசேன், அவரது உதவியாளர் உள்ளிட்ட 7 பேரும் இன்றுகாலை செல்லூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். உடனடியாக நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறைக்குஅனுப்பப்பட்டனர்.
விபத்து -நடக்க காரணமாக இருந்த மதுக் கடையை உடனடியாக -மூடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
மாணவர்கள் அச்சம்:
இந் நிலையில் தீவிபத்து நடந்த செல்லூர் புனித அந்தோணியார் பள்ளிக்கு அ-ச்-சம் கார-ண-மா-க இன்று வெறும் 50பேர் மட்டுமே வந்திருந்தனர்.
கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்தின் கோரத்தை டிவிகளில் பார்த்து பயந்து போயிருந்த பள்ளி மாணவர்கள்,அதேபோன்ற ஒரு தீவிபத்தை நேரில் பார்த்ததால் பீதியடைந்துள்ளனர்.
இதனால் இன்று பள்ளிக்கு செல்ல அவர்கள் மறுத்து விட்டனர். அதேபோல, பெற்றோர்களும் தங்களதுபிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப பயப்படுகிறார்கள். இதன் காரணமாக புனித அந்தோணியார் பள்ளிக்குமாணவ, மாணவியர்கள் அதிக அளவில் இன்று வரவில்லை. மொத்தம் 250 பேர் படிக்கும் அப்பள்ளியில் வெறும்50 பேர் மட்டுமே இன்று பள்ளிக்கு வந்திருந்தனர்.
பள்ளிக்கூடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டால் மட்டுமே தங்களது பிள்ளைகளை அனுப்ப-முடியும் என்று பெற்றோர்கள் கூறுகிறார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications