கொளத்தூர் மணி திடீர் கைது
சேலம்:
பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணியை போலீசார் இன்று அதிகாலை கொலை முயற்சி வழக்கில்திடீரென்று கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் உரக்கடை வைத்திருப்பவர் கிருஷ்ணன். இவரது உரக்கடைக்கு நேற்றிரவு சிலர் வந்து கிருஷ்ணனையும், அவரது மகன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர்.
படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேட்டூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, அவரதுதம்பி பழனிச்சாமி மற்றும் சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணனின் மகள் சமீபத்தில் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம்தொடர்பாக கொளத்தூர் மணி கிருஷ்ணனிடம் சமரசம் பேசியதாகவும், இதற்கு கிருஷ்ணன் உடன்படாததால்தான்அவர் தாக்கப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இதையடுத்து இன்று அதிகாலை கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு மேட்டூர் நீதிபதியின் வீட்டில்ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடம் இருந்து மீட்பதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனுக்குஉறுதுணையாக இருந்தவர் மணி. ராஜ்குமார் விடுவிக்கப்பட்டு காட்டிலிருந்து வெளியே வந்தவுடன் தங்கியதும்மணியில் தோட்ட வீட்டில் தான்.
வீரப்பன் விஷயத்தில் மணி மீது போலீசார் பல வழக்குகள் போட்டு கைது செய்துள்ளனர். இப்போது அவர் மீதுகொலை முயற்சி வழக்குப் பதிவாகியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications