இராக்: பிணைக்கைதிகளை விடுவிக்க புதிய நிபந்தனை
பாக்தாத்:
தங்கள் வசமுள்ள பிணைக்கைதிகள் 7 பேரை விடுவிக்க இராக் தீவிரவாதிகள் புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.
குவைத் மற்றும் கல்ப் லிங்க்ஸ் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்த 3 இந்தியர்கள் உட்பட 7 பேரை கடந்த 21ம்தேதி இராக் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இவர்களை விடுவிக்க, இராக்கில் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவும், அமெரிக்க ராணுவநடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட 250 பேருக்கு இழப்பீடு வழங்கவும் குவைத் லாரி நிறுவனத்தை தீவிரவாதிகள்நிர்பந்தப்படுத்தி வருகின்றனர்.
மேலும் பெருமளவு பணத்தையும் எதிர்பார்க்கின்றனர். பிணைக்கைதிகளை மீட்க, தீவிரவாதிகள் கேட்கும்பணத்தை தர குவைத் லாரி நிறுவனம் ஒப்புக் கொண்டது.
தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் துலாய்மியும், லாரி நிறுவன அதிகாரிகளும் நேரடிப்பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து பிணைக்கைதிகள் விரைவில்விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில், தீவிரவாதிகள் மேலும் ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளனர். இதுகுறித்து லாரி நிறுவனத்தின்செய்தித் தொடர்பாளர் அபு சைனே கூறுகையில்,
பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த நிலையில், பிணைக்கைதிகள் எந்நேரமும் விடுவிக்கப்படலாம் என்று நாங்கள்எதிர்பார்த்து வந்தோம். ஆனால் இப்போது புதிதாக ஒரு நிபந்தனையை விதித்துள்ளனர்.
எங்கள் நிறுவன ஊழியர்களை விடுவிக்க, எந்த நிபந்தனை விதித்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றுஅவர்கள் கருதுகின்றனர். தீவிரவாதிகளின் புதிய நிபந்தனை குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம் என்று கூறியஅவர், நிபந்தனை என்னவென்பதைக் கூற மறுத்து விட்டார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications