சேலம் காலைக் கதிர் அலுவலகம் மீது தாக்குதல்
கடலூர்:
கடலூர் தினமலர் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடந்தையடுத்து, அந்தக் குழுமத்தைச் சேர்ந்த காலைக்கதிர்பத்திரிக்கையின் சேலம் அலுவலகத்தின் மீதும் பா.ம.கவினர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியினரின் வலியுறுத்தல் மற்றும் போராட்டம் காரணமாக தினமலர் ஆசிரியர்ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் கடலூர்காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள தினமலர் பத்திரிக்கை அலுவலகம் பாமக தொண்டர்களால் தாக்கப்பட்டுமுற்றிலும் சேதமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 4 பாமகவினரை போலீஸார் கைது செய்தனர்.
இந் நிலையில் கடலூர் மாவட்ட பாமக தலைவரும், பஞ்சாயத்து யூனியன் தலைவருமான பழ. தாமரைக்கண்ணன்தலைமையில் பாமகவினர் கடலூர் பழைய டவுன் காவல் நிலையத்திற்கு வந்தனர். காவல் நிலையத்தில் அவர்கள்ஒரு புகாரைக் கொடுத்தனர்.
அதில், தினமலர் அலுவலகம் தாக்கப்பட்டதற்குப் பழிக்குப் பழி வாங்கும் வகையில், தினமலர் ஆசிரியர்ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் தூண்டுதலின் பேரில் ஒரு கும்பல், செல்லாங்குப்பம் என்ற இடத்தில் என்னையும், பிறபாமக நிர்வாகிகளையும் கடுமையாக தாக்கினர். இதில் நான் உள்ளிட்ட அனைவரும் காயமின்றித் தப்பிவிட்டோம்.
எங்களைஆள் வைத்துத் தாக்க உத்தரவிட்ட தினமலர் ஆசிரியர் உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்க இன்ஸ்பெக்டர் ஜவஹர்லால் மறுத்துவிட்டார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு பண்ருட்டி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் விரைந்து வந்தார்.
அவர் தலைமையில், பாமகவினர் கும்பலாக காவல் நிலையத்திற்குள் அமர்ந்து கொண்டனர். தினமலர் ஆசிரியர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் மட்டுமே முற்றுகையை விலக்கிக் கொள்வோம் என அவர்கள் கூறிவிட்டனர். நேற்றிரவு முழுவதும் விடிய விடிய இந்த முற்றுகைப் போராட்டம் நடந்தது.
இந் நிலையில் விருத்தாச்சலம் பாமக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மதிமுக தலைவர் பத்மநாபன், திமுக செயலாளர்தங்கராசு, காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டசெயலாளர் மணிவாசகம் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த இன்ஸ்பெக்டர் ஜவஹர்லால் பாமகவினரின் புகாரை ஏற்றுக் கொண்டு, தினமலர்ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, செய்தியாளர்கள் மகாலிங்கம், ரமேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது முதல் தகவல்அறிக்கை பதிவு செய்தனர்.
10 பேர் மீதும் கொலை முயற்சி, கொலை மிரட்டல், கலகம் விளைவிப்பது, பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில்ஈடுபடுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாமகவினன் இந்தபோராட்டத்தால் நேற்றிரவு பெரும் பதற்றம் நிலவியது.
இந் நிலையில் நேற்றிரவு சேலம் நெத்திமேட்டில் உள்ள காலைக் கதிர் அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடந்தது.நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 20 பேர் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்க முயன்றனர். ஆனால்,கதவுகளைப் பூட்டிவிட்டு போலீசாருக்கு செக்யூரிட்டிகள் தகவல் கொடுத்ததால், கதவை இரும்புக் கம்பிகளால்தாக்கிவிட்டு அவர்கள் ஓடிவிட்டனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications