அடுத்த மாதம் டெல்லி செல்கிறார் ஜெயலலிதா!
சென்னை:
வறட்சி பாதித்த மாநில முதல்வர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம்மத்தியில் டெல்லி செல்லவுள்ளார்.
வறட்சி பாதித்த மாநல முதல்வர்களின் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் ஜெயலலிதாவும்கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக செப்டம்பர் மாதம் மத்தியில் அவர் டெல்லி செல்வார் எனத் தெரிகிறது.
தனது டெல்லி பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது. மன்மோகன் சிங் பிரதமரான பின் ஜெயலலிதா அவரை சந்திக்கவுள்ளது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின்போது, சாணக்கியபுரியில் தமிழக அரசால் ரூ. 26 கோடி செலவில் விரிவாக்கம் செய்துகட்டப்பட்டுள்ள தமிழ்நாடு இல்லத்தின் கட்டடத்தை ஜெயலலிதா தொடங்கி வைப்பார். 3 நட்சத்திர ஹோட்டல்வசதியுடன் இந்த புதிய தமிழ்நாடு இல்லம் கட்டப்பட்டுள்ளது.
4 மாடிகள் அடங்கிய இதில் சில அறைகள், தமிழக ஆளுநர், முதல்வர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஆகியோருக்காக பிரத்யேகமாகக் கட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications