முஸ்லீம் லீக் தலைவருக்கு உயர்நீதிமன்றம் தடை
சென்னை:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தை கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்எம்.பி, தலைமை நிலைய செயலாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் துணைத் தலைவரான ஜமால் மொஹைதீன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
காதர் மொய்தீன், திமுக சின்னத்தின் கீழ் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகி உள்ளார்.இதன் மூலம் அவர் திமுக உறுப்பினராக மாறியுள்ளார். எனவே இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகக் குழுக்கூட்டத்தை நடத்துவதற்கு அவருக்குத் தகுதியில்லை.
இதேபோல கட்சியின் வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பதற்கும் அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், காதர் மொய்தீனுக்கும், அப்துல் ஹக்கீக்கும்இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications