சேலத்தில் தாய், மகள்கள் தற்கொலை
சேலம் - தூத்துக்குடி:
சேலம் அருகே தாயாரும் இரு மகள்களும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். தூத்துக்குடியில் மூன்றுகுழந்தைகளை தாயே நீரில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ரியல் எஸ்டேட்வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு தனப்பிரியா (17), கீர்த்தி பிரியா(8)ஆகிய இரு மகள்கள்.
இன்று காலை நடராஜன் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் சரஸ்வதியும் அவரது மகள்கள் இரண்டு பேரும்விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை குறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் விரைந்துவந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பச் சண்டை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி முருகேசன். அவருக்கு மாரியம்மாள்,ராமலட்சுமி (32) என இரு மனைவிகள். மாரியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. ராமலட்சுமிக்கு பொன்சமுத்திரா(6), சதீஷ் (4), பொன்ராஜ் (2) ஆகிய மூன்று குழந்தைகள்.
ராமலட்சுமிக்கும் மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு மூளுவதுண்டு. நேற்றிரவும் சண்டைநடந்துள்ளது.
இந் நிலையில் இன்று அதிகாலை தனது மூன்று குழந்தைகளையும் வீட்டருகே உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுமுக்கிய ராமலட்சுமி, தானும் தொட்டியில் குதித்துள்ளார். மூன்று குழந்தைகளும் மூச்சத் திணறி இறந்தன.ராமலட்சுமியும் அரை மயக்கத்தில் தண்ணீரில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications